மட்டக்களப்பு ஆயித்தியமலைப் பொலிஸ் பிரிவிலுள்ள முள்ளாமுனை வயல்பகுதியிலிருந்து கட்டி அணைத்த நிலையில் காணப்பட்ட இளைஞரதும் யுவதியதும் சடலங்கள் நேற்று புதன்கிழமை காலை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
விவசாயியான நெல்வயல் சொந்தக்காரர் தனது வேளாண்மையைப் பார்வையிடச் சென்றபோது இந்த இரு சடலங்களும் அணைத்த நிலையில் வயலுக்குள் கிடப்பதைக் கண்டு ஆயித்தியமலைப் பொலிஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளார்.
பிணமாகக் கிடந்தவர்களின் வசமிருந்த அடையாள அட்டை மூலம் அவர்களில் ஒருவரான பெண் திக்கோடையைச் சேர்ந்த 22 வயதான அழகுதுரை மேகலா என்றும் மற்றையவரான ஆண் களுதாவளை 4 ஐச் சேர்ந்த 38 ஆம் கொலனி வாசியான 34 வயதுடைய அழகரெட்ணம் இளங்கோ என்றும் தெரியவந்திருக்கின்றது.
இருவரிடமும் கைத்தொலைபேசிகளும் காணப்பட்டுள்ளன. ஆயித்தியமலைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர். நீதிபதியின் ஆணை கிடைத்ததும் மரண விசாரணை இடம்பெறவிருப்பதாக திடீர் மரணவிசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் தெரிவித்தார்.
இவர்களின் சடலங்களுக்கருகில் விஷமருந்து போத்தலும் இவர்கள் பயணித்த மோட்டர் சைக்கிளொன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான விசாரணை இடம் பெற்றுவருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

Aucun commentaire:
Enregistrer un commentaire