பொது மக்களின் பணத்தை கொள்ளையிட்டு ஆட்சி நடாத்தி வரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தை விரட்டியடிக்கும் மக்கள் போராட்டங்களை ஜூலை மாதம் ஆரம்பிக்க போவதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதற்கான ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த சகல தொகுதி அமைப்பாளர்களும் தற்போது இருந்தே அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஊழல் மிக்க இந்த அரசாங்கத்தை வீழ்த்தி, மக்கள் மற்றும் நாட்டுக்காக ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்த போகும் இந்த பயணத்திற்னு பங்களிப்புச் செய்யாத, பொறுப்புக்களை தட்டிக்கழிக்கும் தொகுதி அமைப்பாளர், ஊடனடியாக அந்த பதவிகளில் இருந்து நீக்கப்படுவார்கள் எனவும் ரணில் கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுக்கு நியமனக்கடிதங்களை வழங்குவதற்காக கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (18) ஏற்பாடு செய்திருந்த வைபவத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மக்களுக்கு சொந்தமான ஊழியர் சேமலாப நிதி மற்றும் நம்பிக்கை நிதி ஆகியவற்றை கொள்ளையிட அரசாங்கம் பாரிய முயற்சிகளை ஆரம்பித்துள்ளதாக சுட்டிக்காட்டும் ரணில் விக்ரமசிங்க, இந்த நிதியங்களில் உள்ள பணத்தை பாதுகாத்து, அதனை உழைக்கும் மக்களின் எதிர்காலத்திற்காக, அவர்களிடம் பெற்றுக்கொடுக்க வேண்டியது அனைத்து அரசியல்வாதிகளினதும் கடமையாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire