இலங்கை நாடாளுமன்றின் சபாநயகர் ஆளும் கட்சிக்கு சார்பாகவும் எதிர்க கட்சிக்கு எதிராகவம் செயற்பட்டு வருகின்றார் என ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
சபநாயாகர் சமால் ராஜபக்ஸ நாடாளுமன்றத்தில் கட்சி பிரிவினை வாதத்தினைக் காட்டி வருகின்றார் இதனடிப்படையில் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அக் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாடாளுமன்ற அமர்வுகளின் போது ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் சபை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படும் விதத்தில் நடந்துகொள்கின்றனர் ஆனாலும் அவர்களுக்கு எதிராக எந்தவொரு சட்டநடவடிக்கைகளும் எடுப்பதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் அமைச்சர் மேர்வின் சில்வா போன்றோர் சபை அமர்வுகளில் தொடர்ச்சியாக இடையூறு ஏற்படுத்தி வருவதாகவும் அவர்களுக்கு எதிராக சபாநாயகர் நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் இவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனாலும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு மட்டும் நாடாளுமன்றத்தில் இடையூறு ஏற்படத்தினால் சபாநாயகர் கடுமையான முறையில் எச்சரித்து வருகின்றார்.
கடந்த வியாழக்கிழமை ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் நாடாளுமன்றஉறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல ஆகியோருக்கு எதிராக சபாநாயகர் நடந்து கொண்ட விதம் அதிருப்தி அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Aucun commentaire:
Enregistrer un commentaire