dimanche 10 juin 2012

மதக்கோளாரா...?மனக்கோளாரா...?கிளிநொச்சி நகரத்தில் பௌத்தவிகாரை


கிளிநொச்சி நகரத்தில் பௌத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. வடக்குக் கிழக்குப் பிரதேசத்தில் பௌத்த விகாரைகளையும் புத்தர்சிலைகளையும் அரசாங்கமும் இராணுவமும் அமைத்து வருவதாக குற்றம் சுமத்தப்படும் நிலையில் கிளிநொச்சியிலும் பௌத்த விகாரை அமைக்கப்படுகிறது. 

கிளிநொச்சியில் வெண்புறா செயற்கைக் கால் அமைக்கும் வெண்புறா நிறுவனம் இயங்கிய இடத்தில் ஏற்கனவே ஒரு பிரமாண்ட புத்தர்சிலை அமைக்கப்பட்டிருந்தது. 
இந்நிலையில் தற்பொழுது அவ்விடத்தில் பௌத்த விகாரை ஒன்றை அமைக்கும் நடவடிக்கை இடம்பெற்று வருகிறது. இவ்வாறான நடவடிக்கைகள் தமிழ் மக்களின் மனங்களில் காயங்களை ஏற்படுத்தக்கூடியது......மதக்கோளாரா...?மனக்கோளாரா...?

Aucun commentaire:

Enregistrer un commentaire