சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் சாமியார் நித்யானந்தாவுக்கு கர்நாடகாவில் உள்ள சொத்துக்களை முடக்கவோ அல்லது அவற்றை நிர்வகிக்க அதிகாரியொருவரை நியமிக்கவோ நடவடிக்கை எடுப்பது பற்றி மாநில அரசு பரிசீலித்து வருவதாக கர்நாடக மாநில முதலைமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் வாழும் கன்னட பெண்ணொருவர் சாமியார் நித்தியானந்தா மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளதாக கடந்த வாரம் உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வெளியானது.
இதன்தொடர்ச்சியாக நித்தியானந்தா ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பொன்றின்போது, ஆசிரமத்தில் இருந்த நித்தியானந்தா தரப்பினருக்கும் செய்தியாளர்கள் போல் சென்றிருந்த கன்னட அமைப்பினருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டதையடுத்து காவல்துறையினர் அங்கு தடியடி நடத்தவேண்டிய நிலை ஏற்பட்டது.இதையடுத்து கன்னட அமைப்புகள் நித்தியானந்தா மீதும் அவரது ஆசிரமத்தின் மீதும் கடும் ஆத்திரத்தை வெளிப்படுத்தியிருந்தன.
இந்த தகராற்றால் ஏற்பட்ட சட்ட ஒழுங்குப் பிரச்சனை குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
கன்னடக அமைப்புகளிடமிருந்து அரசுக்கு ஏற்பட்டுள்ள அழுத்தங்கள் முற்றிவரும் நிலையில் முதலைமைச்சர் சதானந்தா கவுடா உறுதியான நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்ப்பதாக செய்தியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
நாளை திங்கட்கிழமை கர்நாடக முதலைமைச்சர் இதுகுறித்த முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Aucun commentaire:
Enregistrer un commentaire