இலங்கை நாடாமன்றத்துக்கான தேர்தல்களில் மதகுருமார் போட்டியிடுவதை அரசியல் அமைப்பு ரீதியாக தடை செய்வதற்கான நகர்வு ஒன்றினை ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருமான விஜயதாஸ ராஜபக்ஷ முன்னெடுத்துள்ளார்.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு பேசியுள்ள அவர் இது குறித்த தனது முயற்சிகள் வெற்றிபெறுமாயின் அது 19 வது அரசியலமைப்பு திருத்தமாக அமையும் என்றும் கூறியுள்ளார்.
இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தனக்கு ஆதரவு தரும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டின் அரசியல் கலாச்சாரத்தில் மாற்றங்களை ஏற்படுத்தவும், தொய்வடைந்துபோகும் நாடாளுமன்ற தரத்தை தடுத்து நிறுத்தவும் மதகுருமாரால் சாதகமான பங்களிப்பை செய்ய முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைகளைக் கொண்டு பார்க்கையில் மதகுருமார் அரசியலில் இருந்து தவிர்க்கப்படுவது சரியானதே என்று அரசியல் ஆய்வாளரான கீதபொன்கலன் தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.
இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் போன்ற விடயங்களிலும் நாடாளுமன்ற மதகுருமாரின் செயற்பாடுகள் பாதகங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire