ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான, ரணில் விக்ரமசிங்க நாளை சீனாவிற்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். ரணில் விக்ரமசிங்கவுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் இந்த விஜயத்தில் இணைந்து கொள்ள உள்ளனர். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பினை அடுத்து இந்த விஜயம் இடம்பெறுவதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் 16ம் திகதி வரையில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் சீனாவில் தங்கியிருப்பார்கள் எனக் கூறப்படுகிறது. தலைநகர் பீஜிங், யுவாங், சங்காய் போன்ற நகரங்களுக்கு விஜயம் செய்ய உள்ள குழுவினர் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சிரேஸ்ட தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Aucun commentaire:
Enregistrer un commentaire