நாட்டை பிரிப்பது சம்பந்தமாக தமது கட்சியின் யாப்பில் எந்த விடயங்களும் உள்ளடக்கப்படவில்லை என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அந்த யாப்பு தமிழில் இருப்பதுடன், அதனை ஆங்கில மொழியில் மொழிமாற்றம் செய்யும் போது வேண்டுமென்றே தவறாக மொழிப்பெயர்ப்பு செய்துள்ளதாக அவர்கூறியுள்ளார்.
இலங்கையில் செயற்படும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை தமிழரசு கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, டெலோ, ஈபிஆர்எல்எப் ஆகிய கட்சிகளின் யாப்பில் நாட்டை பிரிப்பது குறித்து சில விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் இந்த கட்சிகளை தடைசெய்ய வேண்டும் எனவும் கோரி சிங்கள தேசிய முன்னணியின் செயலாளர் சட்டத்தரணி ஜயந்த லியனகே உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கு சம்பந்தமாக கருத்து வெளியிடும் போதே அவர் சம்பந்தன் இதனை கூறியுள்ளார்.
மட்டக்களப்பில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாநாட்டில் உரையாற்றிய இரா. சம்பந்தன், தமிழ் அரசின் அரசியல் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக செய்யும் போராட்டம் புதிய அத்தியாயத்திற்கு வந்துள்ளதாக தெரிவித்திருந்ததாக இந்து பத்திரிகை தெரிவித்துள்ளது.
Aucun commentaire:
Enregistrer un commentaire