dimanche 15 avril 2012
13ஆவது அரசியல் அமைப்பின்படி தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வுவழங்கக் கோருகிறார் ரணில் விக்கிரமசிங்க
13ஆவது அரசியலமைப்பு சீர்திருத்த அதிகாரப்பகிர்வு இலங்கையில் வழங்கப்படவேண்டும் என ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்து கிறார். இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ரணில் விக்கிரமசிங்க காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியை சந்தித்தபோதே அவர் இதனைக்கூறியுள்ளார். இந்தியாவிற்கான தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கையின் எதிர்க்கட் சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியை சந்தித் துள்ளார். இந்த சந்திப்பு நேற்று முன்தினம் இடம் பெற்றுள்ளது.
இலங்கை தமிழர்களுக்கு அரசியல் தீர்வு ஒன்று கிடைக்கப் பெறுமானால் அது இலங்கை யரின் விருப்பத்துக்கு அமையவே நிகழ வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கோரியுள்ளார். 13வது அரசியலமைப்பு சீர்திருத்தத்தை அடிப்படையாக கொண்ட அதிகாரப்பகிர்வு வழங்கப்படவேண்டும். இலங்கை வாழ் தமிழர்களுக்கு அரசியல் தீர்வொன்று பெற்றுக் கொடுக்கப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டிலே ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்தும் செயற்படுகின்றது.
இந்நிலைப்பாட்டை ஏனைய கட்சிகளும் கொண்டிருக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியை ரணில் விக்கிரமசிங்க சந்தித்த போது சோனியா காந்தியின் குடும்ப உறுப்பினர்கள் சிலர் இருந்ததாகவும் இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire