lundi 23 avril 2012
கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில்மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம்
இன்று காலை மட்டக்களப்பு மாநகர சபையில் மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட அபிவிருத்திக்குழு துணைத்தலைவரும் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ,மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச செயலாளர்கள், நகர சபைத் தவிசாளர்கள், திணைக்களத் தலைவர்கள், அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கமநெகும, திவிநெகும அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் காணி விவகாரங்கள் தொடர்பாக வாக்குவாதமும் இடம்பெற்றது.
குறிப்பாக காத்தான்குடி, ஆரையம்பதி எல்லை தொடர்பாக பலத்த வாக்குவாதங்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire