samedi 21 avril 2012
கருணாநிதி மீது கோத்தபாய சீற்றம்
தமிழீழத்தை அமைக்கும் தனது கனவை, திமுக தலைவர் மு.கருணாநிதி இந்தியாவில் வைத்துக் கொள்ள வேண்டும். இலங்கையில் அது ஒருபோதும் சாத்தியமாகாது என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தனித் தமிழீழம் அமைக்க ஐ.நாவின் கண்காணிப்பில் பொதுவாக்கெடுப்பு நடத்தும் யோசனைக்கு, திமுக தலைவர் மு.கருணாநிதி ஆதரவு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனையடுத்தே , அவரைக் கடுமையாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ சாடியுள்ளார்.
அவர் மேலும்,
இலங்கையில் வாழும் தமிழர்களை விட மிகவும் அதிகமான தமிழர்கள் தமிழ்நாட்டில்தான் வாழ்கின்றனர். அவரால் இலங்கையில் தமிழீழத்தை உருவாக்க முடியாது.
தமிழீழம் பற்றி யார் பேசுகிறார்களோ அவர்களை நாம் பயங்கரவாதிகளாகவே கருதுகிறோம்.
இலங்கைவாழ் தமிழ் மக்களை கருணாநிதி தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கக் கூடாது. சர்ச்சைக்குரிய அறிக்கைகளின் மூலம் எமது நாட்டை அழிக்கும் இந்திய அரசியல்வாதிகளில் கருணாநிதியும் ஒருவர். இது அரசியல் ஆதாயத்துக்கான ஒரு தந்திரோபாயமே.
எமது நாடு சுதந்திரமான ஒரு நாடு என்பதை கருணாநிதி புரிந்து கொள்ள வேண்டும். தமிழீழத்தை உருவாக்க அவர் முயற்சிக்கக் கூடாது.
அவருக்கு ஈழத்தை அமைக்கும் விருப்பம் இருந்தால் அதை அநேக தமிழர்கள் வசிக்கும் தமிழ்நாட்டில் உருவாக்கட்டும்" எனவும் தெரிவித்துள்ளார்.
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire