mardi 3 avril 2012
இலங்கையரசு இந்தியாவுடன் அணுசக்தி பாதுகாப்பு ஒப்பந்தம்-
அணுசக்தி பாதுகாப்பு தொடர்பில் இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை கைச்சாத்திடுவதற்கான ஆவணமொன்றை இந்தியாவிடம் கையளித்துள்ளதாக இலங்கையரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் பல பிரதேசங்களில் அணு ஆலைகள் காணப்படுவதாகவும் இந்த அணு ஆலைகளின்மூலம் இலங்கையின் மன்னார் மற்றும் வடக்கு பகுதிக்கு பாதிப்பு ஏற்படுவதனை வரையறுக்கும் வகையில் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கூடங்குளம் அல்லது வேறு இந்திய அணு ஆலைகளில் விபத்து ஏற்படுமாயின் அதன் கதிர்கள் இலங்கையின் மன்னார் மற்றும் வடக்கு பகுதியை தாக்கக்கூடும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக கூடங்குளம் அணுமின் நிலையம் மன்னாருக்கு அருகில் இருப்பதாகவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire