mercredi 18 avril 2012
தனி ஈழம் அமைப்பது குறித்து .கருணாநிதி
இலங்கையில் தனி ஈழம் அமைப்பது குறித்து பொதுஜன வாக்கெடுப்பு நடத்தும் யோசனைக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கையில் தனி ஈழம் அமைவது தொடர்பான பொதுஜன வாக்கெடுப்பு நடத்துவதை தான் ஆதரிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இம்முறையின் கீழ் சில நாடுகள் அங்கீகாரம் பெற்றுள்ளதை சுட்டிக் காட்டியுள்ள அவர் ஐ.நா. சபையின் தலையீட்டின் கீழ் இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இவ்விஷயத்தில் இந்திய அரசு முக்கிய பங்காற்ற முடியும் என்று தெரிவித்துள்ள அவர் ஐ.நா. இதை செயல்படுத்துவதற்கு இந்தியா ஆதரவும் அழுத்தமும் தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். ___
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire