jeudi 26 avril 2012

கிழக்கு மாகாண 327 பட்டதாரிஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டது

கிழக்கு மாகாண பட்டதாரி மற்றும் டிப்பே;ளோமா ஆசிரியர்களுக்கான ஆசிரியர் நியமனம் இன்று (24.04.2012) கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திசாநாயக்க அவர்களின் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாகவும் மாகாண அமைச்சர்களான எம்.ஸ்.உதுமாலெவ்வே, எம் எஸ். சுபைர் ஆகியோரது பங்குபற்றுதலுடன் குறித்த ஆசிரியர்களுக்கான நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன. மேற்படி வைபவமானது கல்வி அமைச்சின் பதில் செயலாளர் எம்.ரி.ஏ. நிஸாம் தலைமையில் திருகோணமலை உவர்மலை விவேகானந்தா வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் காலை 11.00மணியளவில் இடம்பெற்றது. மொத்தமாக இன்று 327 ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டது. இதிலே தமிழ் மொழிமூலமான ஆசிரியர்கள் 256 பேரும் சிங்கள மொழி மூலமான ஆசிரியர்கள் 71 பேருக்கும் வழங்கப்பட்டது. தமிழ் மொழிமூலமான ஆசிரியர்களில் கணிதப் பாடத்திற்கு 97 ஆசிரியர்களும் விஞ்ஞான பாடத்திற்கு 40 ஆசிரியர்களும் மற்றும் அங்கிலப் பாடத்திற்;கு 119 ஆசியர்களும் நியமனம் பெற்றார்கள். குறித்த ஆசிரியர்கள் அனைவரும் கிழக்கு மாகாணத்திலுள்ள கல்வி வலயங்களிலே அதிகளவான ஆசிரியர் பற்றாக் குறைகளை எதிர் கொள்கின்ற பாடசாலைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் பதில் செயலாளர் எம்.ரி.ஏ. நிஸாம் குறிப்பிட்டார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire