mercredi 25 avril 2012
அக்னி ஏவுகணையை விட விலையேற்றம் ஆபத்தானது
இந்தியாவின் அக்னி ஏவுகணையை விடவும் இலங்கையில் பொருட்களின் விலையேற்றம் ஆபத்தானது என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் வாழ்க்கைச் செலவு வானளவு உயர்வடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் அக்னி ஏவுகணை சீனா உள்ளிட்ட பிராந்தியத்தின் அண்டை நாடுகளுக்கு ஆபத்து என பலர் கருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள், மின்சாரம், உணவுப் பொருட்கள் மற்றும் போக்குவரத்து போன்ற துறைகளில் பாரியளவு விலையேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் பொருட்களின் விலை உயர்வடைவதற்கு மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ராலே பொறுப்பு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொருளாதாரத்தை வலுப்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பே யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தின் பிரதான கோஷமாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத்தையும், ஊடக சுதந்திரத்தையும், மக்கள் உரிமையையும் நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
கட்சித் தலைமையகம் சிறிகொத்தவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire