vendredi 13 avril 2012
முக்கியத்துவம் வாய்ந்தது இந்திய எம்.பிக்கள் குழு வருகை
இந்திய அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறிலங்காவுக்கு விஜயம் மேற்கொள்வது தற்போதைய காலகட்டத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக அமைந்துள்ளதாக அமைச்சரும் மனித உரிமைகள் குறித்த ஜனாதிபதியின் விசேட தூதுவருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். புலம்பெயர் மக்களின் இனவாத பிரிவினர் கூறும் பொய்யான கூற்றுக்களைத் தவிர்த்து சிறிலங்காவில் உண்மையில் என்ன நடக்கின்றது என்று இந்திய எம்.பி.க்களினால் புரிந்துகொள்ள இந்த விஜயம் சிறந்த சந்தர்ப்பமாக அமையும் என சமரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. சபையின் மனிதப் பேரவையில் இந்தியா எதிராக வாக்களித்தமைக்காக அதனுடனான உறவு எந்த வகையிலும் பாதிக்காதெனவும், அதனை நாம் மேலும் வலுப்படுத்த வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire