mercredi 4 avril 2012
வடமாகாண மக்களுக்காக மத்திய வங்கியின் கடன் திட்டங்கள்
வடமாகாண மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் பலதரப்பட்ட வங்கிக்கடன் உதவிகளை வடமாகாண மத்திய வங்கி வழங்கி வருவதாக வங்கியின் பிரதி முகாமையாளர் பா.சிவதீபன் தெரிவித்தார்.
2009 ஆண்டு பிற்பகுதியிலிருந்து இதுவைரை மத்திய வங்கி இலகுகடன் திட்டத்தின் மூலம் ரூ 6.5 பில்லியன் ரூபா கடன்களை வடமாகாணத்திற்கென வழங்கியுள்ளதாகவும், இதன் மூலம் ஏராளமான மக்கள் பயனடைந்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
விவசாயக் கடன், கால்நடைகள் வளர்ப்பதற்கான கடன், வடக்கின் வசந்தம் கடன் திட்டம் (இரண்டாம் கட்டம்), சுயதொழில் கடன்(செஃபி), சௌபாக்கியா கடன், வறுமை ஒழிப்புக் கடன் ஆகிய கடன் வழங்கல் திட்டங்கள் தற்போது நடைமுறையில் காணப்படுகின்றது.
படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு செஃபி கடன் திட்டம் மூலம் சுயதொழில் வாய்ப்பைப் பெற்றுக் கொடுக்கப்படுகின்றது. அத்துடன் உயர்கல்வியை மேற்கொள்வதற்கான கடன் உதவியாக தகுதி அடிப்படையில் 50,000 ரூபா தொடக்கம் வழங்கப்படுகின்றது.
மேலும் மக்களுக்கு இந்தக் கடன் திட்டங்கள் தொடர்பான நிதியியல் விழிப்புணர்வு கருத்தரங்குகளை வடமாகாணத்திற்கான மத்திய வங்கி பல இடங்களில், குறிப்பாக முல்லைத்தீவு, ஓட்டுசுட்டான் போன்ற போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் நடாத்தி வருகின்றது. இது பாரிய முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் கூறினார்.
இதே போன்று கடந்த மாதம் கிளிநொச்சி கோணாவளை பிரதேசத்தில் நான்கு பிரதேச சபை பிரிவுகளில், பெண்களிற்கான நிதியியல் விழிப்புணர்வு கருத்தரங்கை மத்திய வங்கி நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire