lundi 16 avril 2012
விஜேவீர.பிரபாகரன் .கொலைக்கும் உள்ள வித்தியாசம் - விளக்குகிறார் நிமல்கா பெர்னான்டோ
ஜேவிபி என்பது இலங்கையின் இடதுசாரிக் கட்சியாக பார்க்கப்பட்டாலும் அது சிங்கள தேசியத் தன்மையையும் கொண்ட இனவாதக் கட்சியாகவே கடந்து வந்துள்ளது. தமிழ் மக்களை எதிரிகளாக கட்டமைத்துத் தான் அது தன்னை வளர்த்துக் கொண்டது. இந்தியாவையும் எதிரியாகப் பார்த்தது, தமிழ் மக்களையும் எதிரியாகப் பார்த்தது. ஜேபிவியினருக்கும் ராஜபக்ச குழுவினருக்கும் பெரிய வித்தியாசமில்லை. இவர்கள் இருவருமே இனவெறியர்கள்தான் அதனால்தான் பிரச்சினை யாரோடு என்பதைப் பார்க்காமல் அவர்களின் வம்சத்தையே அளிக்கும் அல்லது அவர்களின் தலைமுறையையே நிர்மூலமாக்கும் இனவெறிப் பாசிசத்தைக் கொண்டிருக்கிறார்கள். விஜேவீர கொலைக்கும் பிரபாகரன் மற்றும் போராளிகளின் குடும்பங்கள் குடும்பம் குடும்பமாக கொல்லப்பட்டதற்கும் உள்ள வித்தியாசம் அதுதான்.
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire