இலங்கை சமாதான முற்சிகள் என்ற தலைப்பில் இலங்கைக்கு வந்து உரையாற்றி சிறப்பிக்குமாறு ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சாமிக்கு இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பில் ஓகஸ்ட் மாதம் பாதுகாப்புத் துறையின் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றுமாறு இலங்கை இராணுவம் சாமியை அழைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் கருத்தரங்கில் சமாதான முயற்சிகள் மற்றும் சமாதானம் குறித்துப் பேசுமாறு சாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எழுத்துப் பூர்வமாக இந்த அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாகவும் ஆனால் சாமி இதை ஏற்றுக் கொண்டாரா இல்லையா என்பது தெரியவில்லை எனவும் இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
Aucun commentaire:
Enregistrer un commentaire