mercredi 11 avril 2012

கட்சி ஆரம்பிக்கும் போது இவ்வாறான ஓர் பிரச்சாரம் கிடைப்பது அதிர்ஸ்டவசமானது.

முன்னணி சோசலிச கட்சியின் பிரச்சாரப் பிரிவை பாராட்ட வேண்டுமென பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கடத்தல் சம்பவங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் நகைச் சுவையாக மாற்றமடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். கடத்தல் சம்பவம் தொடர்பில் முன்னணி சோசலிச கட்சி பாரியளவில் பிரச்சாரம் மேற்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். பல மில்லியன் ரூபா செலவிட்டிருந்தாலும் இந்தளவுக்கு கட்சியை பிரச்சாரம் செய்திருக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கட்சி ஆரம்பிக்கும் போது இவ்வாறான ஓர் பிரச்சாரம் கிடைப்பது அதிர்ஸ்டவசமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். இராணுவ முகாம்களையும் சோதனைச் சாவடிகளையும் அகற்றுமாறு குரல் கொடுக்கும் எவரும் தேசிய பாதுகாப்புக்கு ஏற்படக் கூடிய அச்சுறுத்தல்களை கண்டு கொள்வதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire