vendredi 20 avril 2012
மீண்டும் புதியதொரு ஆயுதம்,
இலக்கிய படைப்பை வேட்டையாடும் கலையோடு ஒப்பிடும் பொழுது...
வனம், அதில், சுதந்திரமாக ஓடி திரியும் மிருகங்கள்...ஆகாயம், அங்கு எரிந்து கொண்டிருக்கும் நட்சத்திரங்கள்...நிலவு, அதன் பால் ஒளி...
அங்கு வேட்டயாடபோகும் இலக்கியவாதி எப்படியான வேடனாக இருக்க வேண்டும் ?
காடு, மலை, பாலைவனம், குளிர்ந்த துருவ நிலபரப்பு என்று எல்லா நிலபரப்பிலும் வேட்டையாட துணியும் வேடனாக எழுத்தாளனும் அமைந்துவிட்டால் !
ஆயுதங்கள் ஏதும் இல்லாத வேடனாக
சுதந்திரமாக திரியும் வேடனாக,
விலங்கு ஒன்று தென்படுகிறதா ?
பசிக்கின்றதா ?
உடனே ஆயுதம் ஒன்றை தயாரித்துக்கொண்டு வேட்டையாடு...
விழுந்த விலங்கினை புசி...பசியாறு...தயாரித்த ஆயுதத்தை அங்கேயே விட்டுவிட்டு நட....
மீண்டும் வேட்டையாட வேண்டிய நிபந்தனையா ?
மீண்டும் புதியதொரு ஆயுதம்,
மீண்டும் புதியதொரு வேட்டை,
மீண்டும் புதியதொரு செங்குருதி,
மீண்டும் புதியதொரு பசி,
மீண்டும் புதியதொரு பசியாறல், கொண்ட்டாட்டம்...
மீண்டும் அங்கேயே ஆயுதம் களைப்பு...
மீண்டும் சுதந்திர நடை, நடனம்,
மாதிரி இல்லாத மனிதன்.
நிரந்தர கட்டமைப்புகள் இல்லாத உலகம், இலக்கியம்,
அதுவே சுதந்திரம், அதுவே புதுமை, அதுவே இளமை... Appadourai Arvind
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire