mardi 3 avril 2012
புலியும் திருந்தாது அரசும்திருந்தாது கிழக்கில் எல்.ரி.ரி.ஈ. உறுப்பினர்களை கண்டுபிடிக்க இராணுவத்தினர் தேடுதல்
இலங்கைக்கு வந்ததாக சந்தேகிக்கப்படும் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களையும் ஏனைய ஆயுதக்குழுக்களையும் சட்டவிரோத ஆயுதங்களையும் கண்டுபிடிக்கும் முகமாக கிழக்கு மாகாணத்தில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திருகோணமலை அன்புவழிபுரம், திருகோணமலை – அநுராதபுரம் சந்தி ஆகிய பகுதிகளில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். ஈ.பி.டி.பி. உறுப்பினர் ஒருவரின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலி; சந்தேக நபர் ஒருவர், இந்தியாவிலிருந்து தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் இலங்கை வந்திருப்பதாக கூறியதைத் தொடர்ந்து கிழக்கு மாகாணத்தில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவ்வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire