samedi 21 avril 2012
எதிர்க்கட்சி தலைவி சுஸ்மா சுவராஜ் கிழக்கு முதல்வர் சந்திரகாந்தன்
(20.04.2012) மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய மக்களவை எதிர்க்கட்சி தலைவி சுஸ்மா சுவராஜ் தலைமையிலான நாடாளுமன்ற குழவினரை கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுலைப் புலிகள் கட்சியின் தேசியத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் சந்தித்து உரையாடும் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், மாகாண சபை முறைமையினை தோற்றுவித்த பெருமைக்குரியது இந்திய அரசுதான்.1987ஆம் ஆண்டு அப்போதைய இந்திய பிரதமர் ரஜீவ்காந்தி மற்றும் இலங்கையின் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தன ஆகிய இருவருக்குமிடையில் செய்து கொண்ட ஒப்பந்த்தின் பிரகாரம் தோற்றம் பெற்றதே இன்றைய மாகாண சபை முறைமையாகும். இம் மாகாண சபைக்கென அரசியல் யாப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள அனைத்து அதிகாரங்களும் வழங்கப்படவேண்டும். அதனையே நாமும் வலியுறுத்தி வருகின்றோம்.அதே வேளை இதனை முழுமையாக அமுல்படுத்துவதற்கான தேவையும் தற்போது உணரப்பட்டுள்ளன.
எனவே இது விடயத்தில் அதாவது மாகாண சபைகளுக்கான அதிகாரப்பகிர்வு விடயத்தில் இந்தியாவுக்கு அதனை தோற்றுவித்ததன் அடிப்படையில் அதிகமான வகிபங்கு இருக்கு என்பது குறிப்பிடத்தக்கது என முதலமைச்சர் சந்திரகாந்தன் சுட்டிக்காட்டினார்.
இந்திய அரசினால் விசேடமாக கிழக்கு மாகாணத்திற்கென பல்வேறு உதவிகள் வழங்கப் படடிருக்கின்றன. அந்தவகையிலே திருகோணமலை மற்றும் மட்டக்களப்பிற்கான ரயில் போக்குவரத்திற்கான ரயில் பஸ் வண்டிகள், பேருந்து பஸ் வண்டிகள், கிழக்கு மாகாணத்தில் தகவல் தொழிநுட்ப அறிவை விருத்தி செய்யும் நோக்கில் 1260 கணணிகள் மற்றும்218 பிரின்றர்கள் வழங்கியமை, வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கான தொழில் பயிற்சிகளை மேற்கொள்வதற்கான பாரியளவிலாள இயந்தியரங்களைக் கொண்டமைந்த தொழில் பயிற்சி நிலையத்தினை மட்டக்களப்பு வந்தாறுமூலையில் அமைத்து தந்தமை, கிழக்கு மாகாணத்திலே பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீட்டுவசதிகளை எற்படுததி தந்தமை குறிப்பாக கிழக்கு மாகாணத்திற்கு 4000வீடுகள் வழங்கியமை. அத்தோடு மிக முக்கியமாக யுத்த்தினால் கணவனை இழந்திருக்கின்ற பெண்களுக்கான சுயதொழில் முயற்களை மேற்கொள்வதற்காக இந்திய சேவா அமைப்பின் ஊடாக உதவி வழங்கியமை என்பன குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவைகள.; எனவே இதற்காக இந்திய அரசிற்கும் இந்திய மக்களுக்கும் எமது கிழக்கு மாகாண மக்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் எனவும் முதலமைச்சர் சந்திகாந்தன் தனதுரையில் குறிப்பிட்டார்.
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire