dimanche 15 avril 2012
70 ஆயிரம் குழந்தைகள் எய்ட்ஸ்
ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் 70 ஆயிரம் குழந்தைகள் எய்ட்ஸ் நோயுடன் பிறந்திருப்பதாக தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு இயக்குனர் கூறியுள்ளார். இந்த நோய் மேலும் பரவாமல் தடுக்க கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சர்வேத சுகாதார ஆர்வலர்கள் கேட்டு கொண்டுள்ளனர்.
ஓகுன் மாநில அரசின் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அதிகாரி ஜாண்இடாகோ இது குறித்த தகவலை வெளியிட்டுள்ளார் . இந்த அறிக்கையில் ; பிறந்துள்ள 70 ஆயிரம் குழந்தைகளுக்கு எய்ட்ஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பெரும்பாலான தாய்மார்கள் எய்ட்ஸ் நோயுடன் இருப்பதும், மேலும் மலேரியா , காசநோய் பாதிப்பு இருப்பதும் தெரிய வந்திருக்கிறது. இந்த நோயை கட்டுப்படுத்த மாநில நடவடிக்கை கமிட்டி கட்டுப்படுத்த முழு முயற்சி எடுக்க வேண்டும். தாயிடம் இருந்து குழந்தைக்கு பரவும் இந்த எய்ட்சை கட்டுப்படுத்த முடியுமா என்பது குறித்து முழு அளவில் ஆய்வு செய்து வருகிறோம் என்றார்.
உலக வங்கி நிதி வழங்கியது: நைஜீரியாவில் எய்ட்ஸ்சை ஒழிக்க 255 மில்லியன் டாலர் நிதியாக உலக வங்கி வழங்கியுள்ளது. உலக சுகாதார கணக்கின்படி, இங்கு நகர பகுதிகளை விட கிராம பகுதிகளில்தான் இந்த எய்ட்ஸ் அதிகம் பரவுவதாகவும், இதன் கொடூரத்தை புரிய வைக்க தீவிர பிரசாரம் துவங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire