dimanche 1 avril 2012
இந்தியா தனது படைகளை மீண்டும் சிறிலங்காவுக்கு அனுப்பியிருக்க வேண்டும் என்று முன்னாள் அமெரிக்க இராஜதந்திரி
ராஜிவ்காந்தி படுகொலைக்குப் பின்னர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை கொல்வதற்கு அல்லது உயிருடன் பிடிப்பதற்கு இந்தியா தனது படைகளை மீண்டும் சிறிலங்காவுக்கு அனுப்பியிருக்க வேண்டும் என்று முன்னாள் அமெரிக்க இராஜதந்திரி ஒருவர் எழுதியுள்ள நூல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
‘சீனாவை அச்சுறுத்தும் கனவு, அமெரிக்காவின் கனவு: அடுத்த உலக சக்தியாக இந்தியா‘ என்ற நூலிலேயே அமெரிக்காவின் முன்னாள் இராஜதந்திரி வில்லியம் எச். அவெரி இவ்வாறு கூறியுள்ளார்.
பில் கிளின்ரன் மற்றும் ஜோர்ஜ் புஸ் நிர்வாகங்களில் இந்தியாவிலும், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திலும் இவர் இராஜதந்திரியாகப் பணியாற்றியுள்ளார். அவர் தனது நூலில்,
“ராஜிவ்காந்தி படுகொலை இந்தியாவின் பிராந்திய வல்லாதிக்க சக்தி என்ற நிலை மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை கட்டாயமாக இந்தியாவுக்கு கொண்டு வந்து, நீதியின் முன்நிறுத்துவதன் மூலம், இந்தியா தனது அரசியல் தலைவர்களை தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கும், தனது அரசியல் முறைகளை அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்கும், தெற்காசியாவில் எந்தவொரு சவால்களில் இருந்தும் பாதுகாக்கும் என்று பிராந்தியத்துக்கும் உலகத்துக்கும் தெளிவான செய்தி ஒன்றை சொல்லியிருக்கலாம்.
ராஜிவ்காந்தி படுகொலைக்குப் பின்னர், சிறிலங்காவில் தலையிடுவதற்கு இந்தியாவுக்கு கதவுகள் அகலத் திறந்திருந்தன.
1991ல் தனது முன்னாள் பிரதமர் ஒருவரை தீவிரவாத அமைப்பின் தாக்குதலில் இழந்த அவமானம், நவீன இந்திய வரலாற்றில் குறைத்து மதிப்பிட வைத்துள்ளது.
இந்தியா உறுதியான வெளிவிவகாரக் கொள்கையை - இராணுவ வல்லமையை கொண்டிருக்க வேண்டும்." என்றும் கூறியுள்ளார்.
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire