samedi 7 avril 2012
மீண்டும் ஜனாதிபதியாக அப்துல்கலாம்?
ஜனாதிபதி பிரதீபா பாட்டீலின் பதவிக்காலம் விரைவில் முடிய உள்ளதையடுத்து புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்ய எதிர்வரும் ஜூலை மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் புதிய ஜனாதிபதியை ஆளும் காங்கிரஸ் கட்சியோ, பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ.க.வோ தன்னிச்சையாக தெரிவு செய்ய முடியாது.
மாநிலக் கட்சிகளின் ஆதரவைப் பெற்றால் தான் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற முடியும் என்ற நிர்ப்பந்தமான சூழ்நிலை இந்தப் பெரிய கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் நாடாளுமன்றத்திற்கு முன் கூட்டியே தேர்தல் வரலாம் என்று கூறப்படும் நிலையில் தனது ஆதரவு நபர் ஜனாதிபதியாக வேண்டியது அவசியம் என்று பா.ஜ.க, காங்கிரஸ் இரு கட்சிகளும் பலரது பெயர்களைப் பரிசீலனை செய்து வருகின்றன.
காங்கிரஸ் கட்சி சார்பில் துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி, மத்திய மந்திரிகள் பிரணாப்முகர்ஜி, ஏ.கே. அந்தோனி, சோனியாவின் குடும்ப நண்பர் சாம்பிட் ரோதா ஆகியோரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. இவர்களில் சமீபகால இராணுவ ஊழல் சர்ச்சைகளில் சிக்கியதால் ஏ.கே.அந்தோனி பெயர் பரிசீலனையில் இருந்து கைவிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர்கள் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரியை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க ஆதரவு அளித்துள்ளது. ஹமீத் அன்சாரியை காங்கிரஸ் நிறுத்தினால், அவரை எதிர்த்து முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை களத்தில் இறக்க பா.ஜ.க. தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.
பா.ஜ.க.வுக்கு பல மாநில கட்சிகளின் ஆதரவு உள்ளது. அவர்கள் ஆதரவுடன் அப்துல்கலாமை வெற்றி பெறச் செய்ய முடியும் என்று பா.ஜ.க. தலைவர்கள் நம்புகிறார்கள். அதோடு சிறுபான்மை இன பிரதிநிதிகளின் வாக்குகளைப் பெற முடியும் என்றும் கருதுகிறார்கள்.
பா.ஜ.க. நிறுத்தும் ஜனாதிபதி வேட்பாளருக்கு அ.தி.மு.க. ஆதரவு கொடுக்கும் என்று அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன் ஏற்கனவே சூசகமாக தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க.வுக்கு தமிழக சட்டசபையில் 150 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். நாடாளுமன்றத்தில் 9 எம்.பி.க்கள் இருக்கிறார்கள். இவர்களது வாக்குகள் பா.ஜ.க.வுக்கு மிகவும் கைகொடுப்பதாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire