samedi 7 avril 2012
நஸ்ட ஈடும் இல்லை: தமிழில் தேசிய கீதமும் இல்லையாம் :கோத்தபாய
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் ஒன்றான புலிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற பரிந்துரை அரசாங்கத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. உலகில் எந்த நாடு பயங்கரவாதிகளுக்கு இழப்பீடுகளை வழங்கியதில்லை என அரசாங்கத்தின் உயர்மட்டத் தரப்புத் தகவல்கள் 250 பரிந்துரைகளில் 9.164 என்ற பரிந்துரையில் உயிரிழந்த விடுதலைப்புலிகளுக்கு நல்லிணக்கத்தின் அடிப்படையில், அவர்களின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்க தீர்மானிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகள் அமைப்பு 50 மில்லியனுக்கும் மேல் இலங்கையில் அழிவுகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்றுக்கொள்ள முடியாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆணைக்குழுவின் இந்த பரிந்துரை, ஆணைக்குழுவிற்கு வழங்கிய அதிகாரங்களை மீறி சென்ற பரிந்துரை என தெரிவிக்கப்படுவதாகவும் திவயின கூறியுள்ளது.
இதேவேளை கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அரசியல் ரீதியான பரிந்துரைகளை நாட்டில் அமுல்படுத்த முடியாது என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஆணைக்குழுவில் பரிந்துரைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளில் சிலவற்றை மாத்திரமே செயற்படுத்த முடியும். எனவே அவற்றைச் செயற்படுத்துவதற்கான நடவடிக்கை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் சிலர் மாகாணசபைகள், காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை கோரி நிற்கின்றனர். ஆனால் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியாது.
அத்துடன் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரையின் படி நாட்டின் தேசிய கீதத்தை தமிழில் இசைக்க வேண்டும் என்ற முன்மொழிவானது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல எனவும் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire