dimanche 15 avril 2012
வருடமொன்றிற்கு 70000 மெற்றிக் தொன் உப்பு உற்பத்தி
.
ஆனையிறவு உப்பளங்களில் உப்பு உற்பத்தி நடவடிக்கைகளை 2013 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு முன்பு ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக சம்பிரதாய தொழிற்துறை மற்றும் சிறிய தொழில் முயற்சி ஊக்குவிப்பு அமைச்சின் திட்டப் பணிப்பாளர் அஜித் ஏகநாயக தெரிவித்துள்ளார்.
இதனை மீண்டும் ஆரம்பிப்பதால் 2500க்கும் மேற்பட்டவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்க முடியுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திட்டப் பணிப்பாளர் அஜித்ஏகநாயக மேலும் தெரிவித்துள்ளதாவது, முப்பது வருட கால யுத்தம் காரணமாக ஆனையிறவில் உப்பு உற்பத்திகள் அனைத்தும் ஸ்தம்பிதமடைந்திருந்தன.
இன்று யுத்தமற்ற சூழ்நிலையில் மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறோம். யுத்தத்திற்கு முன்பு இங்கு வருடமொன்றிற்கு 70000 மெற்றிக் தொன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டது. இதனை ஆரம்பிப்பதன் மூலம் அந்த இலக்கை அடைவதே எமது நோக்கமாகுமென்றும் திட்டப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire