உரிமைகளை எடுத்துக்கொள்ளும் வரை போராடுவோம்
இலங்கையில் நீண்ட காலமாக சிங்கள இனவெறி அரசுகளின் அடக்குமுறைக்குள் சிக்குண்டிருக்கும் தமிழ்பேசும்மக்களின் விடுதலையை வென்றெடக்கும் வரை இலங்கையில் மட்டுமின்றி உலகளாவிய ரீதியில் சமூக முற்போக்கு சக்திகளுடன் ஒன்றினைந்து இலங்கை இன வெறியாழர்களிற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்போம் என தொழிலாழார் தினமான இன்று தொரிவித்துக்கொள்கின்றோம்.
புலிபயங்கரவாதிகளை அழிப்பதற்கான போர் என கூறிக்கொண்டு ஆயிரக்கணக்கான தமிழ்பேசும் மக்களை அழித்த சிங்கள அரசானது தொடந்தும் தனது இன ஒடுக்குமுறையை பல வடிவங்களில் முன்னெடுத்து செல்கிறது.
சிலை உடைப்புகள், கலாச்சார சின்னங்களை அழிப்பது மட்டுமின்றி அரசமரங்கள் இருக்கும் இடமெல்லாம் புத்தனை குடியேற்றி இன அழிப்பின் உச்சத்திற்கே சென்றுவிட்டது சிங்கள இனவாதம்.
தனிபிரதிநிதிகளாக தங்களை நிலைநாட்ட விடுதலை போராட்டத்தையே அழித்த புலிகள் இன்று இலங்கை இனவாத அரசுடன் இனைந்து செயலாற்றுவதை மறைப்பதற்காக ஐக்கிய நாட்டு அலுவலகம் வெளிநாட்டு துதரகங்கள் முன் தமிழ்பேசும் மக்களிற்கு விடுதலை கேட்டு புலம்புவதாக மக்களை ஏமாற்றி வருகிறது புலி பினாமிகள்.
தழிழ் கூட்டமைப்பு மற்றும் அரசியல் குழுக்கள் தாம் பெற்றுவரும் சலுகைகளை காப்பாற்றி கொள்வதற்காக தழிழ்பேசும் மக்களிற்கான அரசியல் தீர்வை இலங்கை அலசு முன்வைக்கும் என எல்லோரையூம் ஏமாற்றி வருகிறது இக் கூலிக்கும்பல்.
உரிமைகளை கேட்டு பெறுவதற்கு இலங்கை அரசு மனித உரிமைகளின் பாதுகாவலார்கள் அல்ல மக்களே எமது உரிமைகளை நாமே எடுத்துக்கொள்ளும் வரை போராடுவோம்.
சர்வதேச சமுக பாதுகாப்பு அமைப்பு tel- 0630647878
Aucun commentaire:
Enregistrer un commentaire