dimanche 7 juin 2015

சரவணன், மைக்கேல் போன்றவர்களை நான் சுட்டது உண்மைதான் கொளையை ஒப்புக்கொண்ட பிரபாகரன்

கூட்டமைப்புக்கு ஈழ தேசிய விடுதலை முன்னணி  ..பிரபாகரன் முதலில் எழுப்பிய கேள்வி இது:தமிழீழமா? ஈழமா?..அரசியல் தொடர் - 26  அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை
ஏற்கெனவே ஐக்கியப்பட்டிருந்த ஈ.பி.ஆர்.எல்.எஃப்., ஈரோஸ், ரெலோenlf-1அமைப்புகளோடு இணைய வேண்டும் என்ற அழைப்பை பிரபாகரன் ஏற்றுக்கொண்டார்.
ஆனாலும் ஈரோசிலோ, ரெலோவிலோ பிரபாவுக்கு நம்பிக்கை இருக்கவில்லை.
ஈ.பி.ஆர்.எல்.எஃப். மீது ஏற்பட்ட நல்லெண்ணம் காரணமாகவே ஐக்கிய முயற்சிக்கு பிரபா உடன்பட்டார்.
இதற்கிடையே நடைபெற்ற சுவாரசியமான நிகழ்வொன்றைக் கூறிவிட்டு ஐக்கிய முயற்சி பற்றி தொடருகிறேன்.
பாரதப் பிரதமர் இந்திராகாந்தி இயக்கங்களை விட தம்மையே அதிகம் நம்புவதாக தமிழர் விடுதலைக் கூட்டணியினர் கூறித் திரிந்தனர்.
அமுதரின் இல்லத்தில் ஒரு புகைப்படம இருந்தது-. இந்திராவை அமுதர் சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படமே அது. அழகாக ஃபிறேம் போட்டு அதனை வைத்திருந்தார்.
இந்திய அரசும், மிதவாதத் தலைவர்கள் என்ற வகையில் கூட்டணியை ஆரம்பித்ததில் தட்டிக்கொடுத்து வந்தது.
இயக்கங்கள் தமது சொற்படி நடக்காவிட்டாலும் கூட்டணியினர் தாம் சொல்வதை கேட்கக்கூடியவர்கள் என்று இந்திய அரசு நினைத்திருக்கலாம்.
இந்த நேரத்தில் தான் அமுதருக்கு ஒரு எண்ணம் தோன்றியது.
இந்தியா இயக்கங்களுக்கு ஆயுதப்பயிற்சி கொடுப்பதால் குறிப்பிட்ட இயக்கங்கள் பலமாகிவிடும். ஆயுதங்களும் பெற்றுக்கொண்டு எதிர்காலத்தில் கூட்டணிக்கு மேலும் சவாலாகிவிடலாம்.
எனவே & கூட்டணிக்கும் ஒரு ஆயுதப் படையை உருவாக்குவதுதான் புத்திசாலித்தனம் என்று அமுதர் நினைத்தார்.
இளைய மகன் தலைவர்
அமுதருக்கு இரண்டு பிள்ளைகள். அதில் காண்டீபன் இலண்டனில் அரசியல் புகலிடம் பெற்றிருந்தார். இளைய மகன் பகீரதன் அமுதரோடு இருந்தார்.
பகீரதனை தலைவராக வைத்து கூட்டணியின் ஆயுதப்படையை உருவாக்கத் திட்டமிடப்பட்டது.
இந்தியா கூட்டணிக்குத்தான் பெரும் உதவிகளை செய்யப்போகிறது என்று கூறி பகீரதனும் சிலரும் சேர்ந்து இளைஞர்கள் சிலரை திரட்டினார்கள்.
இயக்கம் என்று இருந்தால்தானே இந்தியா பயிற்சி கொடுக்கும்:
‘அகிம்சையே எங்கள் மூச்சு: ஆயுதங்களை தூர வீசு.’ என்பதுபோலப் பேசிய கூட்டணியின் பெயரில் பயிற்சி பெறுவதோ, ஆயுதம் கேட்பதோ நன்றாகவா இருக்கும்? இருக்காதல்லவா?
அதனால் பகீரதனின் தலைமையிலான ஆயுதக் குழுவுக்கு தமிழீழ தேசிய விடுதலை இராணுவம்(TNA) என்று பெயரிடப்பட்டது.
கிடைத்தது அடி
தமிழ்நாட்டில் ஒரு முகாம் அமைத்து இளைஞர்களை வைத்திருந்தார்கள்.
பயிற்சி முகாம் என்று பெயர்தானே தவிர பயிற்சியும் இல்லை. ஆயுதங்களும் இல்லை இந்திய பயிற்சிக்கு அனுப்பப் போவதாகக் கூறிக் கொண்டிருந்தார்களே தவிர அனுப்புவதாகத் தெரியவில்லை.
இன்று போகலாம். நாளை போகலாம் என்று நாட்களைக் கடத்தினார் பகீரதன். பொறுத்துப் பார்த்து வெறுத்துப்போன இளைஞர்கள் முகாமில் பொறுப்பாக இருந்தவரை அடித்துப் போட்டு விட்டு முகாமை விட்டு வெளியேறிச் சென்று விட்டார்கள்.
அந்த அடியோடு தமிழீழ தேசிய இராணுவம் (ரெனா) இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது.
கூட்டணியின் ஆயுதப்படை கட்டும் முயற்சி & ‘சீச்சி. இந்தப் பழம் புளிக்கும்’ கதையாக மாறிப்போனது.
காந்தீயவாதிகள் கத்தி எடுக்க நினைத்தார்கள். ஆனால் முயற்சி சித்தியடையவில்லை.
இனி & ஐக்கிய முயற்சிக்கு செல்வோம்.
சிறீயைக் கொல்ல சதி?
பிரபாகரன் ரெலோ & ஈரோஸ் மீது நம்பிக்கை கொள்ளவில்லை. அதுபோல ரெலோவுக்கும புலிகள் மீது நம்பிக்கையோ நல்லெண்ணமோ இருக்கவில்லை.
ரெலோ தலைவர் சிறீ சபாரத்தினத்தை கொல்வதற்கு பிரபாகரன் சதி செய்தார் என்று அப்போதுதான் ரெலோ குற்றம் சாட்டிக் கொண்டிருந்தது.
இக் குற்றச்சாட்டுக்கு காரணமான சம்பவம் பற்றியும் கூறவேண்டும்.
1984இன் ஆரம்பத்தில் ரெலோவுக்குள் உள் முரண்பாடுகள் ஏற்பட்டன. ரெலோவின் இரண்டாம் கட்ட தலைமையில் இருந்த உறுப்பினர்கள் சிறீ சபாரத்தினத்தை கடுமையாக விமர்சனம் செய்தனர்.
அரசியல் ரீதியாக இயக்கத்தை வழி நடத்தாமல் இராவணுவவாதக் கண்ணோட்டத்தோடு சீறி செயற்படுவதாக அவர்கள் கூறினார்கள்.
உள் இயக்க பிரச்சனையில் ஈடுபட்டவர்கள் பிரபாகரனிடம் உதவி கோரினார்கள்.
பிரபா உதவி

இதனைத் தொடர்ந்து ரெலோ ஒரு அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில் பின்வரும் தகவல்கள் இருந்தன:
05.05.84 அன்று ரெலோ தலைவர் சிறீ சபாரத்தினத்தை கொலை செய்ய திட்டமிடப்பட்டது.
பிரபாகரனிடமிருந்து கைத்துப்பாக்கியும், குளோரஃபோம் போத்தலும் பெற்றுக்கொண்ட ரெலோ உறுப்பினர்கள் சிறீ சபாரத்தினத்தை கடத்திச் செல்ல திட்டமிட்டனர்.
இதனை ஏற்கெனவே அறிந்து கொண்ட சிறீ சபாரத்தினம் தனது இருப்பிடத்தை மாற்றிக்கொண்டார்.
மீண்டும் 09.05.84 அன்று ரெலோ இயக்கத்தினர் சிலர் தமது தலைவரைக் கொல்ல சதித்திட்டத்தோடு காத்திருந்தார்கள்.
அந்தத் திட்டத்தையும் முறியடித்து சதித்திட்டம் போட்ட உறுப்பினர்களை சிறீ சபாரத்தினத்தின் விசுவாசிகள் கைது செய்தனர்.
ரெலோவின் பாதுகாப்பில் இருந்த சிறீ சபாரத்தினத்தின்  விரேதிகள் 16-05-84 அன்று புலிகளின் உதவியோடு தப்பிச்சென்றனர்.
சிறீ சபாரத்தினத்தின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்தவர் வரதன் என்னும் உறுப்பினர்
அந்த வரதனும் புலிகளோடு இரகசியத் தொடர்பு வைத்திருந்தார். அவரது தகவலின் படியே ரெலோவின் மறைவிடத்தில் புலிகள் புகுந்தனர். சிறீயைக் கொல்ல முயன்றவர்களை மீட்டுச் சென்றனர்.
இதுதான் ரெலோ சார்பாக வெளியே சொல்லப்பட்ட தகவல்கள்.
இச் சம்பவத்தின் பின்னர் ரெலோவும் புலிகளும் விரோத நிலைப்பாட்டில் இருந்தனர்.
இதனால் ஒற்றுமை முயற்சிக்கு பிரபா உடன்பட்டபோதும் ரெலோ குறித்து சந்தேகம் கொண்டிருந்தார்.
முதல் சந்திப்பு
கூட்டணி உருவாக்கிய ஆயுதப்படை; இயக்க மோதலைத் தவிர்க்க பிரபா கூறிய யோசனை (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை 26). BalaNAdeleஅதனால் மூன்று இயக்கப் பிரதிநிதிகளையும் சந்திப்பதற்கு தனது சார்பில் அன்ரன் பாலசிங்கத்தையும், இராசநாயகத்தையும் அனுப்பிவைத்தார். (இராசநாயகம் முன்னாள் யாழ் பல்கலைக்கழக மாணவரவைத் தலைவர்)
கோடம்பாக்கத்தில் இருந்த ஈ.என்.எல்.எஃப் அலுவலகத்திற்கு அவர்கள் இருவரும் சென்றனர்.
மூன்று இயக்கங்கள் ஒன்-றுபட்டு ஈ-என்.எல்.எஃப் கூட்டமைப்பு உருவாகியது ஏப்ரல் 1984இல் புலிகள் கூட்டமைப்போது பேச வந்தது, மார்ச், 23. 1985இல்.
“ஒற்றுமை முயற்சி என்றால் இயக்கத் தலைவர்கள் கலந்துகொள்வதுதான் முறையாக இருக்கும். அதனால் பிரபாகரன் கூட்டத்திற்கு வரவேண்டும்” என்று ஈரோஸ் சார்பாக வே. பாலகுமார் கருத்துத் தெரிவித்தார்.
“தம்பி (பிரபா) வருவதில் பிரச்சனை கிடையாது. பாதுகாப்புக் காரணம் கருதி பொது இடத்தில் சந்திப்பை வைத்துக் கொள்ளலாம்.”
என்று அன்ரன் பாலசிங்கம் கூறினார். சென்னையில் இருந்த பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டல் ‘பிரசிடென்சி’
நான்கு இயக்கத் தலைவர்களும் ‘பிரசிடென்சி’ ஹோட்டலில் சந்திப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டது.
ரெலோ சார்பில் சிறீசபாரத்தினம், மதி, ஈ.பி.ஆர்.எல்.எஃப் சார்பில் பத்மநாபா. குணசேகரன், ரமேஷ், ஈரோஸ் சார்பில் பாலகுமார், முகிலன். புலிகள் சார்பில் பிரபாகரன், இராசநாயகம், அன்ரன் பாலசிங்கம் ஆகியோர் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
கூட்டணி உருவாக்கிய ஆயுதப்படை; இயக்க மோதலைத் தவிர்க்க பிரபா கூறிய யோசனை (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை 26). patmanafa1985 ஏப்ரல் 10ம் திகதி முக்கியத்துவம் வாய்ந்த அந்த சந்திப்பு நடைபெற்றது.
பேச்சு ஆரம்பித்தவுடன் பிரபாகரன் முதலில் எழுப்பிய கேள்வி இது:
“உருவாகப்போவது தமிழீழமா? ஈழமா? கூட்டமைப்புக்கு ஈழத் தேசிய விடுதலை முன்னணி என்று பெயரிட்டுள்ளீர்கள். நாமும் ரெலோவும் தமிழீழம் என்றுதான் கூறிவருகின்றோம். அதனால் கூட்டமைப்பு பெயரை மாற்றினால் என்ன?”
அதற்கு வே. பாலகுமார் பதிலளித்தார். “நாமும் ஈ.பி.ஆர்.எல்.எஃப்பும் ஈழம் என்றுதான் கூறிவருகிறோம். ரெலோவுக்கம் பெயர் ஒரு பிரச்சனை இல்லை.”
இந்த இடத்தில் குறுக்கிட்ட பத்மநாபா. “எமக்கு பெயர் ஒரு பிரச்சனையல்ல. ஐக்கியம்தான் முக்கியம். கூட்டமைப்பு பெயரை மாற்றுவது என்றாலும் பிரச்சனையில்லை.”
என்று கூறிவிட்டார். இதனை எதிர்பார்க்காத பாலகுமார் சொன்னது இது:
“ஈ.பி.ஆர்.எல்.எஃப்பிற்கு பெயர் ஒரு பிரச்சனையில்லாமல் இருக்கலாம். நாங்கள் ஈரோஸ் அப்படி சொல்ல முடியாது. நான் எனதுஆட்களோடு பேசிவிட்டுத்தான் முடிவு சொல்ல இயலும்.”
பெயர் பிரச்சனைக்கு தீர்வு காணும் வரை ஈ.என்.எல்.எஃப்&விடுதலைப்புலிகள் சந்திப்பு என்று கூட்டறிக்கை விடுவதாக முடிவு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பிரபா சில கருத்துக்களைத் தெரிவித்தார்.
“சரவணன், மைக்கேல் போன்றவர்களை நான் சுட்டது உண்மைதான். ஆனால் இயக்க முடிவின்படி தான் செய்தேன். மா, நாகராசா எல்லோரும் உடன்பட்டுத்தான் அந்த முடிவுகள் எடுக்கப்பட்டன. இப்போது நான் தன்னிச்சையாகச் செய்ததாகக் கூறுகிறார்கள்.
“கட்டுப்பாட்டை மீறினால் தண்டிப்பது பிழையல்ல. இப்போது கூட என்ரை பெடியள் விலகிப் போகலாம். ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு, பிரச்சனை இல்லாமல் போனால் அனுமதிப்பேன்.
“ஆயுதங்களோடு போனால் விடமாட்டேன். இயக்கத்தை விட்டு வெளியேறி வேறு இயக்கங்களுக்கு போனால் அதனால் பிரச்சனை வரும்.
“என்னோடு இருந்த ஒருவர் உங்களோடு சேர வந்தால் நீங்கள் சேர்க்கக்கூடாது. உங்களோடு இருக்கும் ஒருவர் என்னோடு சேரவந்தால் நானும் சேர்க்க மாட்டேன்.
இப்படியான அணுகுமுறை இருந்தால் இயக்கப் பிரச்சனைகள் வராது. என்னோடு இருந்து விலகி வந்தவரை நீங்கள் சேர்ததால அவர் எங்களைப் பற்றி தவறாகப் பேசும்போது நாங்கள் பிடிக்க வேண்டிவரும்.

அல்லது உங்களோடு இருந்தவர் எங்களிடம் வந்து இருந்துகொண்டு உங்களைப் பற்றி தவறாக கதைத்தால் நீங்கள் பிடிக்க வருவீர்கள். ஏன் இந்த தேவையற்ற பிரச்சனை.

“நாங்கள் நான்கு இயக்கங்களும் ஒருவரிடமிருந்து விலகுபவரை இன்னொருவர் சேர்ப்பதில்லை என்ற முடிவுக்கு வரவேண்டும்”

“பிரபா அவ்வாறு சொன்னவுடன் அதனை பத்மநாபா மறுத்துப் பேசினார்.

“இயக்க உறுப்பினர்களுக்கு ஜனநாயக உரிமையை மறுக்க முடியாது விலகவும், விரும்பி இயக்கத்தில் சேரவும் அவர்களுக்கு உரிமை உண்டு.”

என்று வாதிட்டார் பத்மநாபா. ரெலோவும், ஈரோசும் அதனை ஏற்றுக் கொண்டன.

பிரபாவின் கருத்து சரியானது என்று கூட்டம் முடிந்தவுடன் பத்மநாபாவிடம் கூறினார் ரமேஷ். எதிர்காலத்தில் இயக்கப் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பிரபா சொன்ன கருத்தை ஏற்று அதனை ஒரு முடிவாக எடுக்கலாம் என்பது ரமேஷின் கருத்தாக இருந்தது. எனினும் பத்மநாபா அதனை ஏற்கவில்லை.

1985ல் பிரபா சொன்ன கருத்து அது. தற்போது 95ம் ஆண்டு.

இந்த இடைப்பட்ட பத்து வருட காலத்தில் ஒரு விடயம் தெளிவாகியிருக்கிறது.

எந்த ஒரு இயக்கத்திலும் முக்கிய பொறுப்பில் இருந்துவிட்டு விலகி வேறு இயக்கத்தில் சேர்ந்தவர்கள் தாமும் உருப்பட்டதில்லை. தாம் சேர்ந்த இயக்கங்களையும் உருப்படவிட்டதில்லை. மாறாக இப்படியானவர்களால் இயக்கங்கள் மத்தியில் ஏற்பட்ட கசப்புக்களே மிஞ்சியிருக்கின்றன.
கோவையும் & பிரபாவும்
கூட்டணியில் முக்கியமானவராக இருந்தவர் கோவை மகேசன், சுதந்திரன் பத்திரிகை ஆசிரியராக இருந்து அவர் எழுதிய எழுத்துக்கள் எழுச்சியை விஆத்தன.

பின்னர் கூட்டணியோடு அவர் முரண்பட்டு தமிழீழ விடுதலை அணியை உருவாக்கினார். இது பற்றி முன்னரே விளக்கமாக கூறி இருந்தேன்.

கோவை மகேசனுக்கு பிரபாகரனில் நல்ல பிரியம் இருந்தது, கோவை மகேசன் மீது பிரபாவுக்கும் ஒரு பிடிப்பு நிலவியது.

தமிழ்நாட்டில் இருந்த கோவை மகேசன் கஷ்டப்பட்டார். அவருக்கு உதவி செய்தார் பிரபாகரன். கோவை மகேசன் பிரபாவின் உதவியோடு ‘வீரவேங்கை’ என்ற பத்திரிகையை சென்னையில் இருந்து ஆரம்பித்தார்.

அப்போது புலிகள் அமைப்பினர் ‘விடுதலைப் புலிகள்’ பத்திரிகையை பொறுப்பேற்றுச் செய்யுமாறு கூறியிருக்கலாம். இயக்கத்திலும் அவரை சேர்த்திருக்கலாம்.

ஆனால் செய்யவில்லை. கோவை மகேசன் நல்லவராக இருக்கலாம். தமிழீழ விடுதலை உணர்ச்சி மிகுந்தவராக இருக்கலாம் & ஆனால் இயக்க கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு நடக்கக்கூடியவரல்ல. தவிர அவரை கட்டுப்படுத்துவதிலும் சங்கடங்கள் ஏற்படும்.

அதனை உணர்ந்தே கோவை மகேசனுக்கும் இயக்கத்திற்கும் இடையே கௌரவமான ஒரு இடைவெளி வைத்துக் கொண்டார் பிரபா.

எவரை&எங்கே &எந்த இடத்தில் வைத்து பயன்படுத்துவது என்ற நுட்பம் தலைமைத் துவத்திற்கு தேவை. அதுவும் ஆயுதப் போராட்ட சூழலில் மிகவும் முக்கிய தேவை.
பரா   -பாலகுமார்

இன்னொரு உதாரணம் கூறுகிறேன்:
ஈரோஸ் அமைப்பை கலைத்துவிட்டதாக கூறிவிட்டு வே. பாலகுமார், பரராஜசிங்கம் போன்றோர் புலிகளோடு சேர்ந்தனர்.
பராவுக்கோ, பாலகுமாருக்கோ இயக்க உறுப்பினர்களை ஆளுமை செய்யும் பொறுப்பு எதனையும் பிரபா கொடுக்க வில்லை.
பாராவை அவரது திறமைக்கு ஏற்ப சிவில் நிர்வாகப் பொறுப்பு கொடுத்து தனது நேரடி கண்காணிப்பில்தான் பிரபா வைத்திருக்கிறார். இயக்க உறுப்பினர்களுக்கு பரா கட்டளை போட முடியாது.
இதிலிருந்து தெரிவது பிரபா 85இல் தெரிவித்த கருத்தில் இன்றுவரை அவரிடம் மாற்றம் இல்லை என்பதுதான்.
இப்போது மீண்டும் ஒற்றுமை முயற்சி கட்டத்திற்கு செல்லலாம்.
ஓடிவந்த உறுப்பினர்
‘பிரசிடென்சி ஹோட்டலில்’ சந்திப்பு முடிந்து பிரபா விடைபெற்றுச் சென்றார். அவரோடு பேசியபடி சென்ற பத்மநாபாவும் மற்றவர்களும் தமது காரில் ஏற ஆயத்தமானபோது ஈரோஸ் உறுப்பினர் ஒருவர் ஓடிவந்தார். ....தொடரும் ....                                                                                       .அற்புதன்.

Aucun commentaire:

Enregistrer un commentaire