vendredi 18 décembre 2015

வெங்கலச் செட்டிகுளம் 20/12/2015 விருந்தினர்களை வரவேற்கக் காத்திருக்கிறது கட்டடக்காடு எழுத்தாளர் பசுந்திரா சசி

கட்டடக்காடு எழுத்தாளர் பசுந்திரா சசி தீபம் ரிவியின் நிகழ்காலம் நிகழ்ச்சியில் உடன் யோகா தினேஷ்                                                                                          வெங்கலச் செட்டிகுளம் விருந்தினர்களை வரவேற்கக் காத்திருக்கிறது.



எந்த சின்ன மீனும் அதனிலும் சின்ன மீனை தின்னவே செய்கிறது "என்ற பிரபலமான கூற்றுக்கு சொந்தக்காரர் .
உலகளாவிய தமிழ் எழுத்துப் பரப்பில் நன்கறியப்பட்ட மூத்த எழுத்தாளர் .
இவ்வாண்டு சிறுகதைத்தொகுதிக்காக அரச விருது பெற்றவர் .
2013 இல் தமிழ்நாட்டு உயர் விருதுகளில் ஒன்றான - விஷ்ணுபுரம் - விருதை பெற்ற முதல் இலங்கைப் படைப்பாளி என்ற பெருமையும் இவருக்குண்டு
அரை நூற்றாண்டுக்கு மேலாக எழுதிக் கொண்டிருக்கும் இவர் தனது எண்பதாவது வயதில் கடந்த வருடம் இலங்கையின் உயர் விருதான சாகித்தியரத்னா விருதை பெற்றவர்.
மேற்படி பெருமைக்கு உரிய தெளிவத்தை ஜோசப் அவர்கள் அழைப்பை ஏற்று
பிரதம விருந்தினராக மேல்மாகாணம் வத்தளையில் இருந்து தமிழின் பால் எழுத்தின் பால் கொண்ட பற்றினால் எம் செட்டிகுளம் மண்ணை மதித்து எம் மண்ணுக்கு வருகிறார் . மேலும் இவருடன் கொழும்பில் இருந்து கலாபூஷணம் கே . பொன்னுத்துரை அவர்களும் கவிஞர் மேமன்கவி அவர்களும் வருகிறார்கள்.
தெளிவத்தை ஜோசப் அவர்கள் அடித்தட்டு ஏழை மக்களின் நண்பன் என்பது அவரது மேற்படி - மீன் - சிறுகதைக் கூற்றில் இருந்து தெரிந்து கொள்ளலாம் . எமது நாட்டின் இந்த மூத்த எழுத்து மேதை உட்பட ஏனைய அதிதிகளையைம் உரிய மரியாதையுடன் வரவேற்க செட்டிகுளம் தயாராகிக் கொண்டு இருக்கிறது. செட்டிகுளத்தில் நடைபெறும் முதல் சிறுகதை நூல் வெளியீட்டு விழா இது. செட்டிகுளத்திற்கு இது ஒரு இன்னொரு சிறப்பு . இழக்க ஏதுமின்றி உயிரை மட்டும் பிடித்துக்கொண்டு வந்த ஒட்டு மொத்த வன்னி மக்களை ஏந்திய பூமி எங்கள் வெங்கலச் செட்டிகுளம் இன்று சான்றோரை வரவேற்று மகிழ்கிறது.
" நூல் வெளியீடுகள் பூப்புனித நீராட்டுவிழாக்கள் அல்ல " நூல் விழாக்கள் மண்ணை , மக்கள் வாழ்வை நீராட்டி சீராட்டும் விழாக்கள் . எனவே வேறுபாடுகளை மறந்து செட்டியூர் நல் உள்ளங்களை கலந்து கொள்ளுமாறு ஊரை பேரில் சுமப்பவனாய் கேட்டுக் கொள்கின்றேன் . நன்றி.
அன்புடன்
செட்டியூர் பசுந்திரா சசி.

Aucun commentaire:

Enregistrer un commentaire