mardi 8 décembre 2015

இனப்பிரச்சினைக்கு தீர்வு 68 வீதமான சிங்களவர்கள் விரும்புகின்றனர் – சந்திரிக்கா

அதிகாரத்தைப் பகிர வேண்டுமென 68 வீதமான சிங்களவர்கள் விரும்புகின்றார்கள் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். பிரான்ஸ் நிறுவனமொன்றின் ஊடாக நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் இந்த தகவல்கள் கிடைக்கப் பெற்றன என அவர் தெரிவித்துள்ளார்.
அதிகாரத்தைப் பகிர வேண்டுமென 68 வீதமான சிங்களவர்கள் விரும்புகின்றனர் – சந்திரிக்கா
தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வுத்திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டுமென விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆரம்பத்தில் 23 வீதமான சிங்களவர்களே அரசியல் தீர்வுத் திட்டத்திற்கு ஆதரவாக இருந்ததாகவும் பின்னர் அந்த எண்ணிக்கை 68 வீதமாக உயர்வடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

வெண்தாமரை அமைப்பு பின்தங்கிய கிராமங்களுக்குச் சென்று அதிகாரப் பகிர்வின் அவசியத்தை வலியுறுத்தியதாகவும் இதனால் சிங்கள மக்கள் அதனைப் புரிந்து கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் ஆகியன மிகவும் சவால் மிக்கது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துச் சுதந்திரம், மதச் சுதந்திரம், மத வழிபாட்டுச் சுதந்திரம் உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் உள்ளடக்கிய வகையில் அரசியல் தீர்வுத் திட்டம் அமைய வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire