mardi 19 mai 2015

தடைசெய்யப்பட்ட புலிகளை நினைவு கூரப்பட்டிருந்தால் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்

Nimal-Siripala-(3)புலிகளை நினைவு கூருவது தடைசெய்யப்பட்டிருக்கையில் அவ்வாறு நினைவு கூரப்பட்டிருந்தால் சம்பந்தப் பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என எதிர்க் கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டார்.
எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் வட பகுதியில் புலிகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றது குறித்து வினவப்பட்டது. இதற்குப் பதிலளித்த எதிர்க் கட்சித் தலைவர் நீதிமன்ற உத்தரவை மீறி புலிகள் நினைவு கூரப்பட்டிருந்தால் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டியது பொலிஸாரின் பொறுப்பு என்றார்.
இது குறித்து கருத்துத் தெரிவித்த ஐ. ம. சு. மு. செயலாளர் சுசில் பிரேம் ஜெயந்த,
எமது ஆட்சியில் புலிகளை நினைவுகூர்வதை நிறுத்த நீதிமன்ற உத்தரவு பெற தேவையேற்படவில்லை. ஆனால் இந்த ஆட்சியில் நீதிமன்ற உத்தரவு பெற்றே அவற்றை நிறுத்த வேண்டியுள்ளது. புலிகளும் புலி ஆதரவாளர்களும் இந்த அரசாங்கத்திற்கு அஞ்சவில்லை. அதுதான் எமது இரு அரசாங்கத்திற்குமிடையிலான வித்தியாசமாகும் என்றார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire