அரசின் ஊழல் நிறைந்த நிதி நிர்வாகத் தால் துயரமடைந்துள்ள மக்களை எரியும் நெருப்பில் தள்ளி விடும் திட்டத்தின் பின்னணியில் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலின் திட்டம் உள்ளமை வெளிவந்துள்ளது.
அரசாங்கம் முகங்கொடுத்துள்ள பொருளாதார நெருக்கடியில் பெற்றுக் கொள்ளவுள்ள சுய இறைமை நிதியின் (Sovereign Bond) ஊடாக மத்திய வங்கி ஆளுநர் நிதி மோசடியில் ஈடுபடத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடன் பெற 15 வெளிநாட்டு வங்கிகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதுடன் இதில் 8 நாட்டு வங்கிகள் கடன் வழங்க இணங்கியுள்ளன.
இந்த வங்கிகளில் உலகில் முதல் 10 வங்கிகளில் ஒன்றாக இருக்கும் (UBS Bank) வங்கியொன்றும் க டன் வழங்க முன்வந்துள்ளது. (விருப்பம் தெரிவித்துள்ள வங்கி)
ஓரு பில்லியன் அமெரிக்க டொலரை 10 வருடங்களுக்கு 6 சதவீத வட்டியுடன் கடன் வழங்க உலகின் முதன்மை வங்கிகளில் ஒன்றான (UBS Bank) வங்கி தனது விருப்பத்தை தெரிவித்துள்ளது.
அரசொன்றுக்கு கடன் வழங்கக் கூடிய அனைத்துத் தகுதிகளையும் குறித்த வங்கி கொண்டுள்ளது. குறித்த வங்கி விருப்பம் தெரிவித்து மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு அனுப்பிய கடிதம் கீழே.
நாட்டு மக்கள் குறித்து சதம் அளவும் யோசிக்காத ராஜபக்ஷ அரசின் கையாட்கள் UBS வங்கியைக் காலால் எட்டி உதைத்து விட்டு வரலாறு முழுவதும் கொள்ளையடித்துச் சம்பாதிக்கும் திட்டத்தில் கொமிசன் பெறும் வகையில் வேறு நான்கு வங்கிகளிடம் இருந்து குறித்த கடனைப் பெற நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதற்காக அரசு 7.5 சதவீத வட்டி செலுத்த வேண்டியுள்ளதுடன் நான்கு வருட காலம் அதற்கு வழங்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக குறித்த நான்கு வங்கிகளுடன் கப்ரால் கொடுக்கல் வாங்கல் தொடர்புகளைக் கொண்டுள்ளார். பெற்றுக் கொள்ளும் கடன் பணத்தில் 3,4 அல்லது 5 வீதம் கொமிசன் சுருட்டிக் கொள்கிறார்.
எனவே நாட்டு மக்களைப் பலிக்கடாவாக்கி நான்கு வங்கிகளில் ஒரு பில்லியன் ரூபா கடன் வாங்குவதால் 3 சத வீதம் கிடைத்தாலும் அஜித் நிவாட் கப்ராலுக்கு 30 மில்லியன் அமெரிக்க டொலர் கிடைக்கும். இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் டொலர் விலையுடன் ஒப்பிடுகையில் 130 மில்லியன் அமெரிக்க டொலர் கப்ராலுக்கு கிடைக்கும்.
இந்த கொமிசன் நிதியை கப்ரால் தனியாக எடுத்துக் கொள்ள மாட்டார். மெதமுலன ராஜபக்ஷக்கள் பலருக்கு மற்றும் ஜயசுந்தரவிற்கும் பங்கு வழங்குவார்.
இதனால் பாதிக்கப்படப் போவது அப்பாவிப் பொதுமக்களே!
Aucun commentaire:
Enregistrer un commentaire