தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் படகுச் சின்னம் எங்கே ? வெற்றிலைச் சின்னம் எம் தமிழர்களின் எதிரி. அதனால் நாம் வாக்களிக்க மாட்டோம் என பல தமிழர்கள் கூறுவார்கள். நேரடியாக முள்ளிவாய்க்காலில் தமிழர்களையும், இளைஞர்களையும் கொன்று குவித்ததாகக் கூறப்படும் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு வாக்களிக்கவில்லையா? அவரது சின்னம் என்ன வீடா? இல்லையே அவரது சின்னம் அன்னம். அதற்கு அப்ப ஏன் தமிழ் மக்கள் வாக்களித்தார்கள். அதற்கு வாக்களிக்க இயலும் என்றால் ஏன் செவெற்றிலைக்கு வாக்களிக்க முடியாது.அதிகூடியளவில் தமிழர் கொலைகளும், பல சூட்சுமங்களும் செய்த ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களிக்கவில்லையா? தமிழர்களின் இரத்தக் கறைகளை நிலத்தில் படியவைத்த சரத் பொன்சேகாவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்கு கேட்டு ஆதரவு தெரிவிக்கவில்லையா?
இவ்வாறான துரோகத்தனங்களை புரிந்துவிட்டு இன்று கிழக்கில் தமிழரின் ஆட்சியினை இல்லாதாக்க முனைவது ஏன்? என்ற கேள்விக்கு மத்தியில்,எது எவ்வாறு இருப்பினும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சியினை இன்னும் 01 தசாப்த காலத்திற்கு மேல் யாராலும் மாற்ற முடியாது. கிழக்கிலும் ஆட்சியமைக்கப் போவது ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சி தான். அத்தோடு தமிழர்கள் தனித்து ஆட்சியமைக்க முடியுமா என்றால் இல்லை. ஆளும் அரசுடன் இணைந்தால் மாத்திரமே ஆட்சியமைக்க முடியும். மாறாக எதிர்க்கட்சியில் அமர்ந்திருப்பதால் எதனையும் செய்ய முடியுமா? இல்லை. நாம் எதிர்க்கட்சியில் அமர்ந்திருக்கும் 05 வருடத்தில் எம் பரம்பரை கொட்டாவி மட்டும் தான் விட முடியும்.இதனைத் தடுத்து ஆளும் அரசில் அதிக ஆசனங்களைப் பெறுமிடத்தே ஆட்சியினையும் பிடித்து உரிமை, அபிவிருத்தி என்று பேரம் பேசவும் முடியும். எம் தமிழ் இனத்தின் இருப்பை நிலைப்படுத்த முடியும் என்பதற்காகவே ஆளும் அரசுடன் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுகின்றோம் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire