lundi 23 juillet 2012

உழைக்க வேண்டும் என்ற எண்ணம் உருவானால் வறுமை தானாகவே ஒழியும் - முதலமைச்சர் வேட்பாளர்


UNP நிறுவனத்தின் ஏற்பாட்டில் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் கூட்டம் மயிலம்பாவளி கருணாலய மண்டபத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர் சிவநேசதுரை சந்திரகாந்தன், திட்டப் பணிப்பாளர் திரு.அன்ரனி சுதன், கிழக்கிலங்கை மகளீர் சங்கத் தலைவி திருமதி.பவளம், ஏறாவூர் வர்த்தக சங்கத் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன், மயிலம்பாவளி கிராம சேவையாளர் ஜெயகோசலன், மற்றும் முக்கியஸ்த்தர்கள், சுயதொழில் முயற்சியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் உரையாற்றிய முதலiமைச்சர் வேட்பாளர் சிவநேசதுரை சந்திரகாந்தன் குறிப்பிடுகையில்,
ஒருமனிதனின் வாழ்வை பூரணப்படுத்துவதில் தொழிலுக்கு அதி முக்கியத்துவம் இருக்கின்றது. அந்த வகையிலே நாம் உழைப்பின் ஊடாக எமது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்கின்றோம். எனவே நாம் சரியாக உழைப்பினை மேற்கொண்டால் வறுமை இயல்பாகவே ஒழிந்து விடும் என முன்னாள் மதலமைச்சர் தனதுரையில் குறிப்பிட்டார். தோடர்ந்து அவர் பேசுகையில்,    
முன்னணியில் திகழவேண்டிய கிழக்கு மாகாணம் போர்ச் சூழலில் நலிவடைந்து பின் தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றது. வறுமை இன்னும் ஒழியவில்லை, சுய தொழிலில் மேம்பாடு இல்லை, நிதியுதவி, தொழிற்பயிற்சி, நிர்வாகக் கூட்டங்கள் என்று பல்வேறுபட்ட உதவிகள் இருந்தும் மக்களின் ஆற்றலையும் அவர்களின் சக்தியையும் அவர்கள் இன்னும் உணராமல் இருப்பதே முன்னேற்றத்தின் தடைக் கல்லாக இருக்கின்றது.
எந்தக் கிராமங்களுக்கு நான் சென்று மக்களைச் சந்தித்தாலும் தாம் வறுமை நிலையில் இருப்பதாகவே பெரும்பாலும் தெரிவிக்கின்றனர். அவர்களது எதிர்பார்ப்பானது குறிப்பிட்ட ஓர் தொகைப் பணத்தினைத் தமக்கு வழங்க வேண்டும் என்பதாகவே இருக்கின்றது.
வருமானம் ஈட்டக் கூடிய முயற்சிகளுக்கான உதவிகளை கோருவோர் மிகக் குறைவு. அவ்வாறு உதவி பெற்றுக் கொள்வோரும் முயற்சிகளை வெற்றியளிக்கும் வகையில் நடைமுறைப்படுத்துவதும் குறைவாகவே காணப்படுகின்றது.
பல வாய்ப்புக்கள் எமது பிரதேசத்தில் காணப்படுகின்றன. உதாரணமாகப் பாசிக்குடாவில் எதிர்வரும் காலங்களில் நாளொன்றுக்கு 6000 – 7000 வரையான கோழி முட்டைகள் தேவை. தேன், மரக்கறி என்பனவும் தேவையாக இருக்கின்றன.
 
வன்னிப் பிரதேசமானது எமது பகுதியினை விட மிக மோசமாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருக்கிறது. வறுமை ஒழிப்புத் திட்டங்களை எமது பிரதேசத்திலும், வன்னியிலும் நடைமுறைப்படுத்தும் போது விரைவில் திட்டங்கள் வன்னிப் பிரதேசத்திலேயே வெற்றி பெறும். காரணம் நிலப்பயன்பாடு, நிதியாளுகை, வருமானம் செலவிடல், சிக்கனம் போன்ற விடயங்களில் எமது பிரதேசத்தைச் சேர்ந்த பெண்கள் இன்னும்
கற்றுக் கொள்ள வேண்டியிருக்கின்றது.
மிகவும் சுறுசுறுப்பாகவும், அர்ப்பணிப்புடனும் இயங்கும் “குடும்ப ஸ்திரி” என்ற ஓர் அமைப்பினை எனது இந்திய விஜயத்தின் போது கேரளாவில் அவதானிக்க முடிந்தது. இப் பெண்கள் அமைப்பினர் சம்பளம், சலுகைகளை எதிர்பார்க்காமல் சமூக சிந்தனையுடன் கூட்டாக இயங்குகின்றனர். வேலைகளுக்கு மனித வளங்களை நிரம்பல் செய்வது மற்றும் உற்பத்தி, சந்தைப்படுத்தல் என்று மிகவும் திறமையாக அவர்கள் செயற்படுகின்றனர்.
ஜப்பானில் ஹரோஷிமா, நாஹசாகி போன்ற பகுதிகளில் குடிசைத் தொழிலாளர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் பல்வேறுபட்ட உற்பத்திகளில் ஈடுபடுகின்றனர். அவற்றுள் தரமான நியமம் கொண்டவை. ஓர் அரச சந்தைப்படுத்தல் நிலையம் மூலம் காட்சிப் படுத்தப்படுகின்றது. அவர்களது பொருட்கள் விற்பனையானவுடன் உடனடியாக உரிய முயற்சியாளர்களின் வங்கிக் கணக்குகளில் பணத்தைச் சேர்த்து விடுகின்றனர். இந்த நடைமுறை என்னைப் பெரிதும் ஆச்சரியப்பட வைத்தது.
எமது மகளீர் அமைப்புக்களிடையே ஒற்றுமை இல்லை. ஒழுங்கான நிர்வாகம் இல்லை. தோழில் முயற்சிகளுக்காக வழங்கப்படும் உபகரணங்கள் புழுதி படிந்தே கிடக்கின்றன.
 
எனினும் எல்லாவற்றையும் ஒரே நாளில் மாற்றி விட முடியாது. மத்திய வங்கியின் நிதி, திட்டங்களுடன் இணைந்து மக்களுக்காக உண்மையாக உழைக்க வேண்டும் என்ற மனத்துடன் பயணிப்போம்.

Aucun commentaire:

Enregistrer un commentaire