இலங்கையில் தமிழ் மக்களின் அடிப்படைத்தேவைகள் மற்றும் சிறார்களுக்கான உதவி மற்றும் சுயதொழில் ஊக்குவிப்பு என ஐநா வினால் சுனாமியின் பின்னர் இலங்கைக்கு ஒதுக்கப்பட்ட பணம் எவ்வாறு தனியார் கணக்குகளுக்கும் புலிகளிடமும் சென்றது என்றும் அதில் ஐ.நா அதிகாரிகளின் ஒத்துழைப்பு எவ்வாறு அமைந்திருந்து என்றும் கொழும்பு டெலிக்கிராப் அம்பலப்படுத்தியுள்ளது.
ஐநா அலுவலகத்தின் மின்னஞ்சல் தொடர்பாடல்கள் மற்றும் குறிப்பிட்ட தமிழ் அதிகாரிகளின் வங்கிக்கணக்குள் தொடர்பான விடயங்கள் அது உளவு செய்து ஆதாரத்துடன் தன் விவாதத்தை முன்வைத்துள்ளது. விடயம் தொடர்பாக கொழும்பு டெலிக்கிறாப்பில் வெளியான கட்டுரை இலங்கைநெற் இற்காக நேசன் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
மொழிபெயர்ப்பு
ஊழல் கோப்புகள் : எல்ரிரிஈ-க்குப் பணம் சென்றுள்ளது என்பது ஐநா-வுக்குத் தெரியும். ஆனால், அமைதியாக இருந்து விட்டது.
எல்ரிரிஈக்கு ஐநா வின் பணம் சென்றுள்ளதாக ஐநா வின் இருந்து கசியும் ஒரு மின்னஞ்சல் கருதுகின்றது. பௌதிக ரீதியாகத் தொடர்பு கொள்ள முடியாத மூன்று இலங்கைக் கம்பனிகளுக்கு ஐநா வின் நிதி எவ்வாறு சென்றது என்பது பற்றி கடந்த மே மாதம் கொழும்பு டெலிகராப் செய்தி வெளியிட்டிருந்தது. அமெரிக்க டொலர் 1.57 மில்லியன் ( 2008 ன் பெறுமதிப்படி சுமார் 16 கோடி 70 இலட்சம் ரூபா ) ஐநா வின் உணவு மற்றும் விவசாய நிறுவனத்தினால் (FAO) தொடர்பு கொள்ள முடியாத மூன்று வழ்ஙகல் கம்பனிகளுக்குகொடுக்கப்பட்டிருக்கின்றது.
தேவ் டிரேடர்ஸ், ஏ. எவ். அசோசியேட்ஸ் மற்றும் YCO ஃபாம் என்ற மூன்று வழங்குநர்களிடம் இருந்து அமெரிக்க டொலர் 1.5 மில்லியனுக்கு அதிக தொகைக்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாண செயற்றிட்ட வழங்கல்களுக்காக பொருட்களை இலங்கையில் உள்ள FAO கொள்வனவு செய்துள்ளது. இந்த வழங்குநர்கள் தந்த பதிவு முகவரியில் அவர்கள் இல்லை. FAO வின் அவசரகால பிரிவில் கடமையாற்றும் நிதி உதவியாளர் நிரஞ்சலா குணராஜ் மற்றும் தேசிய செயற்றிட்ட அலுவலர் தேவராஜா வைகுந்தன் ஆகிய இரு அலுவலர்களும் குறிப்பிட்ட மூன்று கம்பனிகளின் சார்பில் பணத்தைப் பெற்றுள்ளனர்.
தாங்கள் மேற்கொண்டதாகக் கூறும் விசாரணை அறிக்கைகளை வெளியிடுமாறு நாங்கள் ஐநாவைக் கோரினோம். FAO இலங்கைப் பிரதிநிதி பற்றிக் ஈவான்ஸ் மற்றும் உதவி FAO பிரதிநிதி (நிர்வாகம்) டிலான் ஹெட்டிகே ஆகியோரிடம் விசாரணை கண்டுபிடிப்புகளுக்கு என்ன நடந்தது என்று கேட்டு கடிதம் அனுப்பியிருந்தோம். அவர்கள் இன்று வரை விசாணை அறிக்கையினை எமக்கு அனுப்பவில்லை.
அந்த அறிக்கையை பகிரங்கப்படுத்துவதற்குப் பதிலாக “ விடயம் முழுதுமாக விசாரணை செய்யப்பட்டு உரிய முறையில் தீர்க்கப்பட்டது “ என்று ரோமைத் தளமாகக் கொண்ட UN FAO தலைமையக பேச்சாளரின் கூற்றான த இத்தாலியன் இன்சைடர் எழுதிய பிரச்சினை வெளிச்சத்துக்கு வந்தவுடனேயே “ திருத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டது “ என்பதை மேற்கோள் காட்டி பற்றிக் ஈவான்ஸ் சமாளிக்கின்றார்.
நாங்கள் எழுதினோம், “ ஆச்சரியத்துக்குரியதாக, தாங்கள் “அரூவ” கம்பனிகளுக்கு அமெரிக்க டொலர் 1.57 மில்லியன் கொடுப்பனவு செய்ததை பற்றிக் ஈவான்ஸ் மறுக்கவில்லை. UN FAO இலங்கைப் பிரதிநிதி விடயத்தை மூடி மறைக்கின்றார்” என்று நாங்கள் உறுதியாக கூறுகின்றோம். பற்றிக் ஈவான்சிடம் வெளிப்படையாகப் பதில் அளிக்கும்படி அதிக கேள்விகளைக் கேட்டோம். ஆனால், UN FAO இற்றைவரை பதிலளிக்கவில்லை.
உரிய முறையில் விடயம் தீர்க்கப்படவில்லை. பற்றிக் கூறுகின்றார்:
1. பணம் திருடப்படவோ காணாமற்போகவோ இல்லை,
2. எல்லா உள்ளீடுகளும் பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டன. அவைகள் பொருதமான தரத்தில் இருந்தன.,
3. குற்றம் கைகப்படவில்லை,
4. வெளிப்படையான கொள்வனவு செயன்முறைகள் சரியாக பின்பற்றப்படவில்லை
5. பதவிநிலை உத்தியோகத்தரை அகற்றியமை மற்றும் விடயம் தொடர்பாக பொதுமக்களுக்கு அறிக்கையிட்டு உண்ணாட்டு செய்தித் தாள்களில் கட்டுரை வெளியிடச் செய்தது உட்பட நிலைமையைச் சீராக்குவதற்கான உடனடி நடவடக்கை எடுக்கப்பட்டது.
பதில்களை ஒவ்வொன்றாக பரிசீலிப்போம்.
கொள்வனவுச் செயன்முறைகள் சரியாகப பின்பற்றப்படவில்லை என்று அவர் ஏற்றுக் கொள்கின்றார். வெளிப்படையான கொள்வனவுச் செயன்முறைகளைப் பின்பற்ற UN FAO ஏன் தவறியது ? அதுவே ஒரு குற்றம். அவர் கூறுகிறார், ‘பணம் திருடப்படவோ காணாமற் போகவோ இல்லையென்று’. ‘அரூப” கம்பனிகளிடம் பொருட்கொள்வனவு செய்த போது பணம் எங்கே சென்றது?. இந்த ஊழலின் ஒரு பகுதியை மாத்திரமே இன்று வெளிப்படுத்துகின்றோம். பணம் எங்கே சென்றது என்பதை அது காட்டுகின்றது. UN FAO ஊழியர்களின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு மில்லியன் கணக்கான ரூபா மாற்றப்பட்டுள்ளதாக இந்த அரூபக் கம்பனிகளில் ஒன்றான ஏ. எஃவ். அசோசியேட்ஸின் வங்கி விபரங்கள் காட்டுகின்றன.
ஏ. எஃவ். அசோசியேட்ஸில் இருந்து பணமாற்றங்கள் பற்றிய வங்கி விபரங்கள், இரண்டு ஊழியர்களின் தனிப்பட்ட கணக்கிற்கு மில்லியன் கணக்கான பணம் மாற்றப்பட்டிருப்பதை நிரூபிக்கின்றன. 2008 செப்டம்டபர் மற்றும் ஒக்டோபரில் மாத்திரம் ரூபா 4.1 மில்லியனை ஏ. சிவானந்தனின் யாழ்ப்பாணத்தில் உள்ள தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கும் சி.ஆர். மோசசின் மட்டக்களப்பில் உள்ள தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கும் ஏ. எஃப். அசோசியேட்ஸ் மாற்றியிருக்கிறது.
ஈவான்ஸ் சொல்கிறார், ‘ சகல உள்ளீடுகளும் உரிய தரத்தில் பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டன’ என்று’. ‘அரூப’ கம்பனிகள் எவ்வாறு பயனாளிகளுக்கு பொருட்களை வழங்கும்? நிரூபணம் எங்கே? நாங்கள் பெற்றுக் கொண்ட பற்றிக்கின் சொந்த கோப்புகள் எங்களுக்கு காட்டுகின்றன, குறைந்த தரத்திலான உள்ளீடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டதாக. குறைந்த தரத்திலான விதைகளையும் விவசாயப் பொருட்களையும் இலங்கையில் ஏழை விவசாயிகளுக்கு வழங்குவதன் ஊடாக அவர்களை விளைதிறத்துடன் ஏமாற்றுகின்றன.
2008 ஒக்டோபர் 01 திகதி திருகோணமலையில் உள்ள FAO அலுவலகத்தில் உள்ள பென்சிகர் இடமிருந்து வந்த ஒரு மின்னஞ்சல் கூறுகின்றது: குறைந்த தரத்திலான உள்ளீடுகள் தொடர்பான கொள்வனவு முறைமையுடனான விடங்கள் நீண்டகாலமாக தேங்கி கிடக்கின்றன என்று வருத்தத்துடன் அறியத்தருகின்றேன். அவைகள் பற்றி இப்பொழுது கொழும்பு மட்டத்திற்கு கொண்டு வந்திருப்பது முதல் முறை அல்ல. எப்படியோ, அத்தகைய விடங்கள் FAO முறைமையில் நீடிப்பது மற்றும் பிற ஐநா நிறுவனங்களுக்கும் அவை பரவக கூடியவை என்பது கவலைக்குரியது. மேலும் விலை வித்தியாசமானது மிகவும் நியாயமற்றும் மிக அதிகமனதுமாகும் என்று நாங்கள் அறிய வருகினறோம் ( தயவு செய்து கோழிப் பண்ணை கொள்வனவுக் கட்டளையுடன் சரிபார்க்கவும்)”.
பற்றிக் ஈவான்ஸ் குற்றம் நடைபெறவில்லை கூறுவது சுட்டிக் காட்டப்பட வேண்டியதாகும். ‘அரூப’ கம்பனிகளிடம் கொள்வனவு செய்வதம் அவைகளுக்கு பணம் கொடுப்பனவு செய்வதும் ஊழல் இல்லையா? ஊழல் ஒரு குற்றமில்லையா?
பதவிநிலை உத்தியோகத்தரை அகற்றியமை மற்றும் விடயம் தொடர்பாக பொதுமக்களுக்கு அறிக்கையிட்டு உண்ணாட்டு செய்தித் தாள்களில் கட்டுரை வெளியிடச் செய்தது உட்பட நிலைமையைச் சீராக்குவதற்கான உடனடி நடவடக்கை எடுக்கப்பட்டது என்று சமாளிக்கின்றார் ஈவான்ஸ். மீளவும் பொது மக்களை தவறாக வழி நடாத்துகின்றார். குற்றம் இழைக்கப்படா விட்டால் ஏன் பதவிநிலை அலுவலர் ஏன் நிறுவனத்தில் இருந்து அகற்றப்படல் வேண்டும் மற்றும் அவரின் ஒப்பந்தம் ஏன் புதுப்பிக்கப்படவில்லை?
பதவிநிலை உத்தியோகத்தரை அகற்றியமை மற்றும் விடயம் தொடர்பாக பொதுமக்களுக்கு அறிக்கையிட்டு உண்ணாட்டு செய்தித் தாள்களில் கட்டுரை வெளியிடச் செய்தது உட்பட நிலைமையைச் சீராக்குவதற்கான உடனடி நடவடக்கை எடுக்கப்பட்டது என்று சமாளிக்கின்றார் ஈவான்ஸ். மீளவும் பொது மக்களை தவறாக வழி நடாத்துகின்றார். குற்றம் இழைக்கப்படா விட்டால் ஏன் பதவிநிலை அலுவலர் ஏன் நிறுவனத்தில் இருந்து அகற்றப்படல் வேண்டும் மற்றும் அவரின் ஒப்பந்தம் ஏன் புதுப்பிக்கப்படவில்லை?
அதைப்பற்றி பொது மக்களுக்கும் பத்திரிகைகளுக்கும் அறிவித்தல் செய்வதற்கு ஏன் அவ்வளவு காலதாமதம் ஆனது? அவர் ஊழலில் ஈடபட்டிருந்தால் அதுபற்றி ஏன் இலங்கைப் பொலிசுக்கோ CID க்கோ அறிவிக்கவில்லை?
உடனடி நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஐநா கோப்புகளின்படி, அமைப்புக்கள் இருக்கும் ஊதுகுழலாளர்கள் 2006 முதலே இந்த ஒழுங்கின்மைகளை அதிகரித்த்துக் கொண்டு வந்தார்கள்.. ஆனால், 2008 இறுதிவரை நடவடிக்கை எடுக்கவில்லை., 2008ல், ஒரு விசாரணையை FAO தலைமையக கணக்காய்வுத் திணைக்களத்தின் ஊடாக ஆரம்பிக்கப்பட்டது. அதன் மரியா கார்போன் மற்றும் ஜோர்ஜியானா கொஸ்டெலோ அம்மையார்கள் மற்றும் திரு டெனிஸ் ரிச்சர்ட் என்ற மூன்று அலுவலர்கள் விசாரணையை நடாத்துவதற்காக இலங்கைகு வந்தாதர்கள்.
2009 மே 10 ல் UN FAO சண்டே ஒப்சேவர் விளம்பரப் பக்கத்தில் ஒரு விளம்பரத்தை தேவராஜா வைகுநாதனின் படத்திடன் வெளியிட்டது. “ இதனால் பொது மக்களுக்கு அறிப்பதாவது, ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு அமைப்பின் முன்னாள் தேசிய செயற்றிட்ட அலுவலரான திரு தேவராஜா வைகுநாதன் தற்போது FAO வின் சேவையில் இல்லை. அவரது யாதேனும் கொடுக்கல் வாங்கல்களுக்கு FAO பொறுப்பில்லை” என்று ஒரு விளம்பரத்தை செய்திருந்தது.
எனவே, இது போதுமானதா? இந்த ஊழலில் வைகுநாதன் மட்டும்தான் ஈடுபட்டாரா? மற்றவர்கள் யாவர்? ஏன் ஐநா விசாரணைகளை பொலிசுக்குக் கையளிக்கவில்லை?
குற்றம் எதுவும் இடம் பெறவில்லை என்று FAO மறுப்பதுடன், அத்துடன் அலுலகத்திலும் களத்திலும் எல்லா அலுவலரும் தொடர்புபட்டிருக்கும் போது, உண்ணாட்டு இடம் பெயர்தோர் வாழ்க்கை ஆரம்பிக்கக் கூடிய உதவியளிக்கும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு உதவும் பாரிய பாத்திரத்தை எவ்வாறு FAO வகித்தது ? வழங்கப்பட்ட உதவியின் தரத்திற்கும் மேலும் ஊழல் இடம் பெறவில்லை என்பதற்கும் என்ன உத்தரவாதம்?
குற்றம் எதுவும் இடம் பெறவில்லை என்று FAO மறுப்பதுடன், அத்துடன் அலுலகத்திலும் களத்திலும் எல்லா அலுவலரும் தொடர்புபட்டிருக்கும் போது, உண்ணாட்டு இடம் பெயர்தோர் வாழ்க்கை ஆரம்பிக்கக் கூடிய உதவியளிக்கும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு உதவும் பாரிய பாத்திரத்தை எவ்வாறு FAO வகித்தது ? வழங்கப்பட்ட உதவியின் தரத்திற்கும் மேலும் ஊழல் இடம் பெறவில்லை என்பதற்கும் என்ன உத்தரவாதம்?
இது இலங்கையின் அபிவிருத்திக்குப் பெற்றுக் கொள்ளப்பட்ட நிதிகளுக்கான பொறுப்புக் கூறல் பற்றிய ஒரு விடயமாகும். ஈவான்ஸ் சொல்கின்றார், “ விவசாயம், மீன்பிடித்தல், கால்நடை மற்றும் காட்டுத்துறையின் முன்னுரிமைத் தேவைகளை நிறைவேற்ற இலங்கை அரசாங்கத்துக்கு FAO தொடர்ந்து உதவி வழங்குகின்றது” என்று. உண்ணாட்டிலும் வெளிநாட்டிலும் பல அலுவலர்கள் ஊழலில் சப்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்’பது தெளிவாக இருந்த போது, குறிப்பிட்ட ஊழலைப் பற்றி இலங்கை அரசாங்கத்துக்கு ஏன் அறிவிக்கவில்லை?
இதுதான் ஐநாவின் வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூறும் இலட்சணமா? இது உண்மையில் ஐநா வின் சுயாதீன விசாரணை முறைமையை நலிவடையச் செய்கின்றது.
ஏன் மொத்த ஊழலின் சகாவை UN FAO காப்பாற்றுகின்றது என்பதற்கான ஒரு காரணத்தை நாங்கள் அறியக்கூடியதாக இருந்தது.
ஏன் மொத்த ஊழலின் சகாவை UN FAO காப்பாற்றுகின்றது என்பதற்கான ஒரு காரணத்தை நாங்கள் அறியக்கூடியதாக இருந்தது.
இந்த வாரம் உதவி FAO (நிரவாகம்) பிரதிநிதியான டிலான் ஹெட்டிகேயினால் FAO இலங்கைப் பிரதிநிதி பற்றிக் ஈவான்சுக்கு அனுப்பிவைக்கப்பட்ட இன்னொரு ‘இரகசிய’ மின்னஞ்சலை வெளிப்படுத்துகின்றோம். 2008 ஒக்டோபர் 10 ல் திலான் ஹெட்டிகே எழுதுகிறார், “M/S Dev Traders இன் இரண்டு பங்குதாரர்களில் ஒருவர்தானா திரு தேவராஜா வைகுநாதன் (தேஅஅ இல.723580277) என்று நாங்கள் பிரதான வர்த்தக வங்கிகளில் எங்களது தனிப்பட்ட தொடர்புகளுடன் இரகசியமாக சரி பார்த்தோம். 2006 ல் வைகுநாதன் கொழும்புக்கு மாற்றப்பட்டதன் பின்னரே மேலேயுள்ள சகல நிறுவனங்களும் அமைக்கப்பட்டன. மொத்தத்தில் சுனாமி மறுவாழ்வு தவிர, 1/3 க்கு மேற்பட்ட மொத்த விலைக் கொள்வனவு யாவும் மேலே குறிப்பிட்டளவான வழங்குநர்களாலேயே மேற்கொள்ளப்பட்டன. கிடைத்த இரகசிய தகவலின் படி, ஏனைய கம்பனிகள் யாவும் அவரது / குடும்பத்தினர் / நெருங்கிய நண்ர்களாலேயே நடாத்தப்பட்டன. எங்கள் விரணைகளின் படி இந்த கம்பனிகள் உண்மையில் இருக்கவில்லை. குறிப்பிட்ட தொலைபேசிகளிடமிருந்து இருந்து பதிலில்லை மற்றும் முகவரிகளும் போலியானவை. சில காலத்துக்கு முன்பு, நான் வழங்குநர்களைப் பற்றி விசாரித்த போது, ( குறிப்பிட்ட வழங்குநர்கள் எல்ரிரிஈ யுடன் நேரடித் தொடர்புள்ளவர்ளாக இருந்தது உள்ளிட்ட) பாதுகாப்பு காரணங்களுக்காக, அவர்கள் தமது அடையாளத்தை வெளிப்படுத்துவதில்லை என்பது அவர் கூறினார்.
அவருக்கு எரிரிஈ கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் இலகுவில் செயற்படக்கூடியதாக இருந்த்தால், எரிரிஈயுடன் வைகுவாசன் நேரடி தொடர்புபட்டிருந்தார் என்று நம்புவதற்கு என்னிடமும் போதுமான தகவல்கள் இருந்தன”.
“அவரால் அல்லது சம்பந்தப்பட்ட தனிநபர்களால் ஒரு விசாரணை வருமென்று உணரப்பட்டால், அவை திடீரெனக் காணாமல் போய்விடும். அதன் பிறகு விடுவிக்கப்படாத பகுதிகளில் FAO இயங்முடியாது போய்விடும் என்று நான் நம்புகிறேன். அத்துடன் இந்த விபரங்கள் இலங்கை அரசாங்கத்துக்கு தெரிய வந்தால், அது FAO வுக்கு ஒரு நீடித்த இழுக்கை கொண்டு வரும் அபாயமும் உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை”.
இரண்டு நிமிடங்கள் FAO இலங்கைப் பிரதிநிதி பற்றிக் ஈவான்ஸ் இரண்டு நிமிடங்களில் பதிலளித்தார். நன்றி டிஹான், இது தற்பொழுது நமக்குள் இருக்கட்டும். நமது தெரிவைப் பற்றியிப்போம். பற்றிக்.
இரண்டு நிமிடங்கள் FAO இலங்கைப் பிரதிநிதி பற்றிக் ஈவான்ஸ் இரண்டு நிமிடங்களில் பதிலளித்தார். நன்றி டிஹான், இது தற்பொழுது நமக்குள் இருக்கட்டும். நமது தெரிவைப் பற்றியிப்போம். பற்றிக்.
இந்த நிகழ்வினைப் புதைத்து விடுவதற்கு FAO தலைமையகத்தினை ஊக்குவித்தார் FAO பிரதிநிதி (நிர்வாகம்) டிஹான் ஹெட்டிகே. எல்ரிரிஈ தொடர்புடையது இது ஒன்று மட்டும் தானா அல்லது FAO வின் நற்பெயரைப் பாதுகாப்பதற்கா? தனது ஊழியர்களின் வங்கிக் கணக்குகளையோ ‘அரூபி” கம்பனிகளின் வங்கிக் கணக்குகளையோ FAO விசாரணைக் குழு விசாரணை செய்யவில்லை என்று நாங்கள் திட்டவட்டமாக்க் கூறுவோம். நீங்கள் அந்த வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்தால் அந்தப் பணம் எல்ரிரிஈ-க்கு மட்டுமல்ல உயர் நிலையில் உள்ள ஊழியர்களுக்கும் சென்றுள்ளது என்பதை நீங்கள் நிச்சயம் கண்டுகொள்ளலாம்
.
Aucun commentaire:
Enregistrer un commentaire