முஸ்லிம் முதலமைச்சர் எனும் விடயம் ஒரு பாரிய பிரச்சினையில்லை. இதனை பூதாகரமாக்க சிலர் முயற்சி செய்கின்றனர் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
இது தொடர்பில் எமது கட்சியை சேர்ந்த சிலரும் கருத்து வெளியிட்டனர். இதனை பெரிதாக தூக்கி பிடித்து அரசியல் பிரச்சினையாக்க நான் விரும்பவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் பதவிகளில் தங்கியிருக்க வேண்டிய அவசியம் எமது கட்சிக்கு இல்லை. ஆனால் சில கட்சிகள் பதவிகளில் இருந்தால் மாத்திரமே கட்சியை வளர்;க்க முடியும். பதவிகளை கொண்டு கட்சியை வளர்க்க வேண்டிய அவசியம் எமது கட்சிக்கு இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
எனினும் கிழக்கு மாகாண முஸ்லிம்களின் உரிமைகளை விட்டுக்கொடுக்க ஒருபோதும் நான் தயாரில்லை. மக்களின் ஆணையை வைத்து கிழக்கு முஸ்லிம்களின் உரிமையை வென்றுகொடுப்போம் என அமைச்சர் ஹக்கீம் குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிட மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு கட்;சி தலைமையகமான தாருஸ்ஸலாமில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு ஒரு முஸ்லிம் முதலமைச்சரை பெற முடியுமா என ஊடகவியலாளரொருவர் இதன் போது வினவியதற்கே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
"எமது கட்சியை சேர்ந்த சிலர் தங்களே தீர்மானிக்கும் சக்தி என நினைக்கின்றனர். அது ஒரு போதும் நடைபெறாது. இது அவர்களின் பிழையான எண்ணமாகும். அதியுயர் பீடம் மாத்திரமே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தீர்மானிக்கும் சக்தியாகும்.
கிழக்கு மாகாண சபை தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதை கிழக்கு முஸ்லிம்கள் வரவேற்கின்றனர். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் கிழக்கு மாகாண சபை தேர்தலில் இணைந்து போட்டியிட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்திருந்தது.
எனினும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையில் வேட்பாளர் ஒதுக்கீடு தொடர்பாக ஏற்பட்ட இழுபறி நிலையினை அடுத்து தனித்து போட்டியிட தீர்மானிக்கப்பட்டது.
எனினும் இது தொடர்பில் மேலும் கருத்து கூற மறுத்த அமைச்சர் ஹக்கீம் கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடும் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் மற்றும் அமைச்சர் றிசாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றையிட்டு அலட்டிக்கொள்ள தேவையில்லை" என்றார்.
"தனித்து போட்டியிட மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தினால் எமது கட்சிக்கு அரசாங்கத்திலிருந்து எந்த அச்சுறுத்தலுமில்லை. அரசாங்கத்தின் ஒரு பிரிவாகவே முஸ்லிம் காங்கிரஸ் உள்ளது.
எமது கட்சி தனித்து போட்டியிடுவதற்கான காரணம் என்னவென்று அவர்களுக்கு தெரியும். இதற்கு உதாரணமாகவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் பேச்சில் கலந்துகொண்ட அமைச்சர்களான பஸில் ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, சுசில் பிரேமஜயந்த, டலஸ் அழகபெரும மற்றும் அமைச்சரவை பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வெல்ல ஆகியோரின் ஊடக அறிக்கைகள் உள்ளன.
இந்நிலையில் ஜனாதிபதியின் ஊடக பேச்சாளரின் அறிக்கையினை கவனத்திற் கொள்ள அவசியமில்லை. எனினும் அவரின் அறிக்கை கண்டிக்கத்தக்கது. ஜனாதிபதியுடன் நேற்றும் நான் உரையாடினேன். அரசாங்கத்திற்கு விசுவாசமாகவே எமது கட்சி செயற்படுகின்றது. தொடர்ந்தும் அவ்வாறே செயற்படும்.
கட்சி மற்றும் அதன் உறுப்பினர்களுக்கு எது சிறந்ததோ அதற்கிணங்கவே தனித்து போட்டியிட தீர்மானிக்கப்பட்டது. இந்த தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இரண்டு நிலைகள் முஸ்லிம் காங்கிரஸிற்கு இருந்தது. ஒன்று அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுவது. மற்றையது தனித்து போட்டியிவதாகும். எனினும் இந்த தேர்தலில் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுவதற்கு முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீடம் அனுமதி வழங்கியது.
இதனால் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் சுமார் இரண்டு வாரங்களாக பேச்சு நடத்தப்பட்டது. இதன்போது, எமது கட்சியினால் பல விட்டுக்கொடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் குறித்த பேச்சு தோல்வியில் முடிவடைந்ததை அடுத்து தனித்து போட்டியிட கட்சி முடிவெடுத்தது. இந்த தேர்தலி;ல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை உள்வாங்காமல் விட்டதனால் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு இலகுவா ஆட்சியை கைப்பற்றும் நிலையை தவறிவிட்டுள்ளது என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
அரசாங்கத்தின் அனுமதியோடு தனித்து போட்டியிட சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு நான் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். இத்தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதால் தனி ஒரு கட்சியால் ஆட்சியை அமைக்க முடியாது. எவ்வாறயினும் இந்த தேர்தல் எமது கட்சி தனித்து போட்டியிடுவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் எதிலும் கைச்சாத்திடவில்லை.
இத்தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என கட்சியின் பொது செயலாளர் ஹசன் அலி, கட்சி ஆதரவாளர்களின் சார்பாக உயர் பீட கூட்டத்தில் கருத்து வெளியீட்டார். கிழக்கு மாகாண சபை தேர்தலின் பின்னர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸே ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும்" என்றார்.
அப்படியென்றால், தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து கிழக்கு மாகாணத்தின் ஆட்சியை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைக்குமா என ஊடகவியலாளரொருவர் வினவியதற்கு,
"இது தொடர்பில் தேர்தலின் பின்னர் தீர்மானிக்கப்படும். தமிழ் தேசிய கூட்டமைப்பும் கிழக்கு மாகாண ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக மாறலாம்" என அவர் குறிப்பிட்டார்.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கட்சியின் பிரதி தலைவர் ஹாபீஸ் நஷீர் அஹமட், பொருளாளர் ஏ.எம்.அஸ்லம் மற்றும் பிரதி தேசிய அமைப்பாளர் பைசால் காசீம் ஆகியோர் கலந்துகொண்டனர். முஸ்லிம் முதலமைச்சர் எனும் விடயம் ஒரு பாரிய பிரச்சினையில்லை. இதனை பூதாகரமாக்க சிலர் முயற்சி செய்கின்றனர் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கட்சியின் பிரதி தலைவர் ஹாபீஸ் நஷீர் அஹமட், பொருளாளர் ஏ.எம்.அஸ்லம் மற்றும் பிரதி தேசிய அமைப்பாளர் பைசால் காசீம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Aucun commentaire:
Enregistrer un commentaire