கொழும்பு) மக்களின் வாழ்விற்கு சவாலான இந்த அரசாங்கத்தை கவிழ்க்க பலம் மிக்க தொரு எதிர்க்கட்சி உருவாக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அதற்காக எதிர்க்கட்சிகளின் பொது வான கூட்டமைப்பில் இணைந்து கொள்ளுமாறு முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவிற்கு அழைப்பு விடுத்துள்ளார். சிறைமீண்ட பொன்சேகா தனது அரசி யல் பயணத்தை புதிய ஜனநாயக முன் னணி என்ற தன் கட்சியில் மூலம் ஆறுத லாகவே நகர்த்தி வருகிறார்.எனினும் அண்மையில் நிபந்தனையை ஏற்றுக் கொண்டால் ஐ.தே.கவில் இணையத் தயார் என்றும் அதற்காக ஐ.தே.கவின் அடிமட்டக் கட்சிப் பதவிக்குள் முடங்கிக் கிடக்க தயார் இல்லை எனவும் அவர் தெரிவித்திருந் தார். இந்நிலையிலேயே ரணில் இந்த அழைப் பை சரத்திற்கு விடுத்துள்ளார். அந்த அழைப்பில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது; ஊழல் மோசடிகள் மற்றும் சர்வாதிகாரப் போக்கைக் கொண்ட இந்த அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும் என்ற மெய்யான விருப் பம் இருந்தால் சரத் பொன்சேகா எம்முடன் இணைந்து கொள்ள வேண்டும் எனவும் நேர டியாக ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்வதையும் தாம் விரும்புவதாக ரணில் அறிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியில் சரத் பொன் சேகா இணைந்து கொள்வது தொடர்பில் மூன்றாம் தரப்பினரின் தலையீடு அவசியம் இல்லையயன அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை கட்சித் தலைவர் பதவியை ஆயுள் முழுவதும் வகிக்கும் திட்டம் கிடையா தென ரணில் விக்கிரசிங்க தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் கட்சித் தலைவர் பதவிக்காக தேர்தல் நடத்தப்படுவதன் மூலம் பல்வேறு பிரச்சினைகள் எழக்கூடும் எனவும் இதனால் 6 ஆண்டுகளுக்கு ஒரு தடவை தேர் தல் நடத்துவது கட்சியின் ஒற்றுமையை வலுப் படுத்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அடிக்கடி தேர்தல் நடத்தப்படுவதனால் கட்சிக்குள் தேவையற்ற பிளவு ஏற்படும் என வும் அவர் தெரிவித்துள்ளார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire