வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பஸ் மீது பாலாவி - மதுரங்குளிக்கு இடைப்பட்ட பகுதியில் வைத்து வானில் வந்த சிலர் தாக்குதல் நடாத்தியுள்ளனர். இன்று (15) அதிகாலை 2.30 அளவில் இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். தாக்க வந்தவர்கள் தாக்குதலின் பின் வானில் தப்பிச் சென்றுள்ளனர். தாக்குதலில் படுகாயமடைந்த பஸ்ஸின் சாரதி புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதலில் பஸ்ஸிற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதேவேளை, வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி வந்த பஸ் மீது வென்னப்புவ - நைனாமடம் பகுதியில் மறைந்திருந்த சிலரால் நேற்று (14) அதிகாலை 1.30 அளவில் கற்கள் கொண்டு தாக்குதல் நடாத்தப்பட்டதாகவும் அதில் பஸ்ஸின் சாரதி சிறு காயங்களுக்கு உள்ளானதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Aucun commentaire:
Enregistrer un commentaire