ஜனாதிபதி மகிந்த விடுத்தார்
(கொழும்பு) இலங்கையின் அயல் நாடுகளுடன் நல்லுறவை பேணிக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமானது என ஜனாதி பதி மகிந்த ராஜபக் தெரிவித்துள்ளார். அத்துடன் இலங் கையை பிரதிபலிக்கும் வகையில் பிரதிநிதியாக நியமிக் கப்பட்டுள் ளதை உணர்ந்து நாட்டிற்கு களங்கம் ஏற்படாத வாறு பணியாற்ற வேண்டும் என இராஜதந்திரிகளுக்கு அவர் கூறியுள்ளார்.
தியத்தலாவ படைத்தளத்தில் நேற்று முன் தினம் ஆரம்பமான வெளிநாடுகளில் பணி யாற்றும் இலங்கையின் இராஜதந்திரிகளுக்கான பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டு உரை யாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.அவர் தனது உரையில் மேலும் தெரிவித் துள்ளதாவது, ஆசியப் பிராந்தியத்தையே உலகம் தற் போது கவனித்துக் கொண்டிருக்கிறது. இலங் கையில் இடம்பெற்ற முப்பது ஆண்டுகாலப் போர் முடிபடைந்த நிலையில் நாட்டில் அமை தியை ஏற்படுத்த விரைவான நடவடிக்கையை மேற்கொண்டு வரும் நாடாக எம்மை உலக நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன. உலக பொருளாதாரம் பாரிய பின்னடைவை சந்தித்த போதிலும் இலங்கையில் கடந்த ஆண்டு 8.2 சதவீத பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இது நாம் சுதந்திரம் பெற்றதன் பின்னர் அடைந்த அதிகூடிய பொருளாதார வளர்ச்சியாகும்.இத்தகைய துரித வளர்ச்சிகள் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டியது ராஜதந்திரிகள் மற்றும் தூதுவர்களின் கடமையாகும்.வெளிநாடுகையில் ராஜதந்திரிகளாக பணியாற்றுபவர்கள் அந்நாடுகளுடன் நல் லுறவை ஏற்படுத்துவதில் பாரிய பங்களிப் பைச் செய்ய வேண்டும்.நாட்டின் நற்பெயரை சர்வதேச ரீதியாக மேம்படுத்துவத ற்கான சகல நடவடிக்கை களையும் மேற்கொள்ள வேண்டிய கடப் பாட்டை உணர்ந்து எமது ராஜதந்திரிகள் ஒன் றிணைந்து செயற்பட வேண்டும்.வழக்கமான ராஜதந்திரப் பணிகளைவிட ஏனைய ராஜதந்திரிகள் மற்றும் அதிகார பூர்வ தரப்புக்கள் கலந்து கொள்ளும் விருந்துகளும் முக்கியமானவை நீங்கள் இத்தகைய விருந்து களில் கலந்து கொள்ள வேண்டாம் என்றோ அல்லது ஏனைய ராஜதந்திரிகளுக்கு விருந் தளிக்க வேண்டாம் என்றோ நான் கூற வில்லை. அவை செய்யவேண்டியவைதான். ஆனால் இந்த சம்பிரதாயங்களுக்கு அப்பால் உங்களின் பணிகளையும் செவ்வனே செய்ய வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் இந்நாட்டின் பிரதிநிதிகளாகவே நியமிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை உணர்ந்துகொண்டு நாடு எதிர்கொள் ளும் சவால்கள் மற்றும் அதன் இலக்குகள் தொடர் பில் நல்லெண்ண புரிந்துணர்வைக் கொண்டு செயற் பட வேண்டும் என ஜனாதிபதி மகிந்த ராஜ பக் தனதுரையில் மேலும் தெரிவித்துள்ளார்.அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இரண்டு நாள் பயிற்சிப் பட்டறையில் வெளிநாட்டு களில் பணியாற்றும் இலங்கையின் 59 இராஜ தந்திரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

Aucun commentaire:
Enregistrer un commentaire