இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் நோக்கில் அரசால் அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்பது குறித்து கூட்டமைப்புக் கும், ஐக்கிய தேசியக் கட் சிக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று எதிர்க் கட்சித் தலைவரின் அலு வலகத்தில் நேற்றுக் காலை இடம்பெற்றது.
ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான ரணில் விக் கிரமசிங்க, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்பது குறித்தும், தெரிவுக்குழு விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பங்களிப்பு குறித் தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் எதிர்க்கட்சிகள் பங்கேற்பது குறித்தும், நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி இதற்கு மத்தியஸ்தம் வகிப்பது தொடர்பிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதிக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் அண்மையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
குழு தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் தமக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்புக் குறித்து கூட்டமைப்பிற்குத் தெளிவுபடுத்தும் வகையிலும், தெரிவுக்குழுவில் பங்கேற்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை அறிந்துகொள்ளும் நோக்கிலும் ஐ.தே.கட்சிக்கும், கூட்டமைப்பிற்கும் இடையில் முதற்கட்ட சந்திப்பொன்று இடம்பெற்றது.
இதனையடுத்து, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், ஐ.தே.கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் வெளிநாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். அத்துடன், கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எம்.பியும் மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா சென்றிருந்தார்.
இவர்கள் நாடு திரும்பியகையோடு தெரிவுக்குழு விவகாரத்தில் மத்தியஸ்தம் வகிக்கும் ஐ.தே.கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும், கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எம்.பிக்கும் இடையிலான இந்த இரண்டாம் கட்ட சந்திப்பு இடம்பெற்றது.
Aucun commentaire:
Enregistrer un commentaire