இலங்கையின் வடபகுதியில் வாழுகின்ற தமிழ் மக்கள் மீது தொடர்ந்தும் பாகுபாடு காட்டப்படுவதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது. அத்துடன், தமிழ் மக்களை நல்லிணக் கத்துடன் அரவணைத்துக் கொள்வதற்கான செயற் திட்ட மொன்றை அரசாங்கம் கொண்டிருக்க வேண்டும் எனவும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளின் ஊடகவியலாளர்களுடன் நேரடியாக காணொளி மூலம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, அமெரிக்காவின் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான பிரதி ராஜாங்க அமைச் சர் மைக்கல் போஸ்னர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த மைக்கல் போஸ்னர், இலக்கையின் நல்லிணக்கம் மற்றும் மனிதவுரிமை விவகாரங்கள் தொடர் பில் கரிசனையுடன் செயற்பட்டுவரும் அமெரிக்கா, இவ்விடயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திடம் தொடர்ந்து கேள்வி எழுப்பும் எனக் கூறியுள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸு டன் அமெரிக்க இராஜாங்க அமைச்சர் ஹில் லாரி கிளின்டனும் தானும் கடந்த மே மாதம் நடத்திய சந்திப் பின்போது கரிசனைக்குரிய விவகாரங்கள் தொடர்பில் வாதிக்கப்பட்டிருந்தது. இவ்விவகாரங்கள் தொடர்பில் அரசாங் கத்துக்கு அமெரிக்கா தொடர்ந்தும் அழுத்தங் களைப் பிரயோகிக்கும். இலங்கையின் வடபகுதியில் வாழ்கின்ற தமிழ் மக்கள் மீது தொடர்ந்தும் பாகுபாடு காட்டப்படுகின்றது. இந்நிலையில், தமிழ் மக்களை நல்லிணக்கத்துடன் அரவணைத்துக் கொள் வதற்கான செயற்திட்டம் ஒன்றை இலங்கை அரசாங்கம் கொண்டிருக்க வேண்டும் என மைக்கல் போஸ்னர் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத் தினால் அண்மையில் வெளியிடப்பட்டிருந்த உலக மனிதவுரிமைகள் நிலைமை தொடர் பிலான அறிக்கையை மையப்படுத்தியே இந் தக் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Aucun commentaire:
Enregistrer un commentaire