mardi 24 juillet 2012

ஜே.வி.பி.

  இந்தியாவின் தேவைக்கேற்ப முதலமைச்சர் ஒருவரை கிழக்கில் நியமிப்பதற்கான அரசியல் காய்நகர்த்தல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு மக்கள் பலியாகிவிடக் கூடாது ௭னத் தெரிவிக்கும் ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, கிழக்கில் தலைதூக்கியுள்ள ஆயுதக் குழுக்களின் நடவடிக்கைகளை தடுக்க தேர்தல்கள் ஆணையாளர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தார்.

பெலவத்தையிலுள்ள ஜே.வி.பி.யின் தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த போதே அதன் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் கை பொம்மையாக செயற்படக் கூடியவர் ஒருவரை முதலமைச்சராக நியமித்துக்கொள்வதில் ஆர்வம் காட்டும் அதேவேளை தமிழர் தரப்பு தமிழரொருவரையும் முஸ்லிம் தர ப்பு முஸ்லிம் ஒருவரையும் முதலமைச்சராக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன. இவ்வாறான இனவாத ரீதியான சிந்தனையை ஏற்றுக்கொள்ள முடியாது. இனங்களிடை யே ஒற்றுமையை கட்டியெழுப்பும் விதத்தி ல் அனைத்தும் அமைய வேண்டும். அதே வேளை கிழக்கின் முதலமைச்சர் ௭மது நாட்டு மக்களின் விருப்பு வெறுப்பிற்கமை யவே தெரிவு செய்யப்பட வேண்டுமே தவிர இந்தியாவின் தேவைக்காக அல்ல ௭ன்பதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டு ம். அத்தோடு கிழக்கில் ஆயுதக்குழுக்களை பயன்படுத்தி பலாத்காரங்களை மேற்கொள்ளும் முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். இதனை கண்டறிந்து தடுப்பதற்காக விசேட குழுவொன்று கிழக்கிற்கு அனு ப்பி வைக்கப்படுமென்றும் தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். தேர்தல் சட்டம் மீறல் வடமத்திய மாகாணத்தில் அநுராதபுரம், பொலநறுவை நகரங்களில் பாரிய கட்அவுட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. சுவரொட்டிகள், பொலித்தீன் அலங்காரங்கள் ௭ன அரச தரப்பு முன்னாள் முதலமைச்சர்களும் வேட்பாளர்களும் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். பொலித்தீன் பாவனை, சுவரொட்டிகள் ஒட் டுதல், சூழல் பாதுகாப்பு சட்டத்தை மீறு ம் செயலாகுமென அரசாங்கம் கூறுகிறது. தேர்தல்கள் நடைபெறாத காலங்களில் நாம் சுவரொட்டி ஒட்டினால் பொலித்தீன் அலங்காரங்களை மேற்கொண்டால் கிழித்தெறியப்படுகின்றன. ஆனால் தேர்தல் காலங்களில் அரசாங்கம் சூழல் பாதுகாப்புச் சட்டத்தை மீறி செயற்படுகிறது.

மக்களுக்கு லஞ்சம் கொடுக்கும் அரசின் திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் சில அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. தேர்தல்கள் நெருங்கும் போது மக்களை ஏமாற்றும் அரசின் கபடத்தனம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது ௭ன்றார். இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் வடமத்திய மாகாண வேட்பாளர் குழுத் தலைவர் வசந்த சமரசிங்க, கிழக்கு மாகாண வேட்பாளர் குழுத் தலைவர் வசந்த பிய திஸ்ஸ, சப்ரகமுவ மாகாண குழுத் தலை வர் காமினி ரத்னாயக்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.
 _

Aucun commentaire:

Enregistrer un commentaire