தமிழ்த்தேசியம், தமிழர் உரிமை என்றெல்லாம் கொள்கைகளை கூறி அரசியலில் குதித்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது இன்று தமது கொள்கைகளையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு மிகவும் கீழ்த்ரமான அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்கள் மனத்தில் இருந்து அகன்றுகொண்டு வருகின்றது. அதுவும் குறிப்பாக கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினுடைய செல்வாக்கு மிகக்குறுகிய காலத்தில் சரிவடைந்து வருவதனை அவதானிக்க முடிகின்றது.
உண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் அவர்களுடைய வழிப்படுத்தலில் தமது கொள்கைகளை சரிவரக் கடைப்பிடித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது அவாகள்இல்லாத சூழலில் தமது கொள்கைகளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி வருவதனை அவதானிக்கக் கூடியதாகவிருக்கின்றது. அந்தவகையில் தமது பிரதான கொள்கையான வடக்கு கிழக்கு இணைந்த தாயகக் கோட்பாட்டிலிருந்து விலகி இன்று கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுகின்றது.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினுடைய அரசியல் செல்வாக்கு கிழக்கில் சரியத்தொடங்கியதனை எடுத்துக்காட்டுவதற்கு பல்வேறு எடுத்துக்காட்டுகளை இங்கு முன்வைக்கமுடியும். அந்தவகையில் பிரதானமாக அண்மையில் இடம்பெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (தமிழ்தேசியக் கூட்டமைப்பு) வருடாந்த மாநாடு மற்றும் தற்போதைய கிழக்கு மாகாணசபைத் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் ஆகிய இரண்டையும் எடுத்துக்கொள்முடியும்.
இலங்கை தமிழரசுக் கட்சி என்பது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினுடைய பிரதான தலைமைத்துவக் கட்சியாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இலங்கை தமிழரசுக் கட்சியே பலமானதும் தலைமைத்துவத்தையும் கொண்ட கடசியாகும். இக்கட்சியினுடைய 14 வது வருடாந்த தேசிய மாநாடு மட்டக்களப்பில் இடம்பெற்றது. இந்த மாநாட்டில் சுமார் 300 பேர் வரையிலான ஆதரவாளாகளே கலந்து கொண்டிருந்தனர். அதிலும் அதிகமானோர் வடமாகாணத்தைச் சேர்ந்தவர்கள். இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் கிழக்கில் சரியத்தொடங்கியுள்ளது என்பதற்கு மிகப் பொருத்தமான சான்றாகும். அதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தனது அரசியல் பலத்தை கிழக்கில் இழந்து வருவதாக பல அரசியல் ஆய்வாளர்கள் கூட பத்திரிகைளில் எழுதியிருந்தார்கள். இவற்றை விட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கே ஏற்கனவே தமது மாநாட்டிற்கு குறைந்த மக்களே வருவார்கள் என்பதை முன்கூட்டியே அறிந்திருந்தமையினால்தான் சிறியதொரு திருமணமண்டபத்தை ஒழுங்கு செய்திருந்தார்கள். ஆனால் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மிகப்பெரியளவில் மைதானத்தில் தமது முதலாவது தேசிய மாநாட்டை கல்லடியில் நடாத்தினார்கள் 13000 இற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். இவற்றை ஒப்பிட்டு நோக்குகின்றபோது கிழக்குத் தமிழர்களின் மனங்களிலிருந்து தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மெல்ல மெல்ல மறைந்து வருகின்றது என்பது புலப்படுகின்றது.
தற்போது செப்டம்பர் 8 இல் இடம்பெற இருக்கும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்காக இடம்பெறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரசார நடவடிக்கைகளும் அதில் கலந்து கொள்வோரின் எண்ணிக்கையும் அடுத்ததாக தமிழ்தேசியக் கூட்டமைப்பின் செல்வாக்கு மிகவும் மந்த நிலையில் உள்ளதை எடுத்துக்காட்டுவதாக அமைகின்றது. குறிப்பாக இதனை விளக்குவதற்கு நாம் அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் படுவான் கரையிலும், சந்திவெளியிலும் நடாத்தப்பட்ட பிரசாரக் கூட்டங்களை சான்றாகக் காட்டலாம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரான வி.ஆர். மகேந்திரன் என்பவருக்காக படுவான் கரையில் 23.07.2012 முதலாவது பிரசாரக் கூட்டம் இடம்பெற்றது. இதில் வி.ஆர் மகேந்திரன் மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா, யோகேஸ்வரன், அரியனேந்திரன் ஆகிய மூவரும் பிரசாரத்திற்காக வந்திருந்தனர். இக்கூட்டத்தில் மொத்தமாக கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கை 16 பேராகும் இதில் பாராளுமன்ற உறுப்பினர் மூவர் மற்றும் வேட்பாளர் மகேந்திரன் தவிர்த்துப் பார்த்தால் 13 பேர் ஏனையோர் அதிலும் கூட ஆலயத்தில் பணிபுரியும் சேவகர்களும் அடங்கும். அந்தவகையில் இந்த கூட்டத்தில் மக்கள் துளியளவெனும் ஆதரவில்லை என்பதனை எடுத்துக்காட்டப் போதுமானதாகும்.
அத்துடன் அண்மையில் சந்திவெளியிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய வேட்பாளர் கிருஸ்ணப்பி;ளை சேயோன் என்பவருக்கான இடம்பெற்ற கூட்டத்திலும் இதே நிலைமையே காணப்பட்டது. குறிப்பாக 30 பேர் வரையிலானவர்களே கலந்து கொண்டனர். அதிலும் சுமார் 20 பேர் வேட்பாளளருடைய உறவினர்களாவார்கள்.
படுவான் கரைப்பிரதேசமோ அல்லது சந்திவெளிப்பிரதேசமோ தமிழ்மக்களால் சூழப்பட்ட பிரதேசங்களாகும். அது தவிர கடந்த போராட்ட காலத்தில் பல வீரர்களை தியாகம் செய்த பிரதேசங்களுமாகும். அத்தகைய பிரதேசங்களே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிரை இக் கிழக்கு மகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதனை விரும்பவில்லை என்றால் ஏனைய பிரதேசங்களைப் பற்றிச் சொல்ல வேணடியதில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பனர் தமிழர் மனங்களிலிருந்து அகற்றப்படுகின்றமைக்கு காரணமே அவர்களுடைய கொள்கை மாறிய அரசியலும் தடம்புரண்ட அரசியல் பாதையுமே ஆகும். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் இத்தகைய பிரசாரக் கூட்டங்களுக்கு மக்கள் சமூகமளிக்காத தன்மையானது எதிர்வரும் செப்டம்பர் மாதம் இடம்பெறும் தேர்தலில் அவர்களுக்கு படுதோல்வியை ஏற்படுத்தும் என்பதை எடுத்துக்காட்டும் சான்றாதாரங்களாகும்.
அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர் ஒரவர் கூறினார்' இத்தடவை இடம்பெறும் கிழக்கு மகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வியடைவதை விட, தேர்தலில் நிற்காமலேயே விட்டிருக்கலாம். ஏனெனில் குறிப்பிட்டளவு செல்வாக்காவது மக்களிடத்தில் இருந்;திருக்கும். கொஞ்சம் கௌரவத்தையாவது காப்பாற்றியிருக்கலாம்.' என்று மிகவும் கவலையுடன் கூறினார். இது கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தோல்வி உறுதியாகி விட்டதனை எடுத்துக்காட்டுவதற்குரிய சான்றாகும். உண்மையில் இவ்வருட ஆரம்பத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசியத்தலைவரும் முன்னாள் முதல்வருமான பிள்ளையான் அவர்கள் பேச்சுக்கு அழைத்தும் கூட ஒரு பதிலும் கூறவில்லை. பல தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் கூட தமிழ்தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியுடன் பேச்சுவார்த்தையை நடாத்தி சில இணக்கப்பாடுகளுக்கு வரவேண்டும் என கோரியிருந்தனர். எல்லாவற்றையும் உதாசீனம் செய்து மீண்டும் கிழக்கின் முதல்வராக ஆளப்போகும் பிள்ளையான் அவர்கள் முதல்வராக வராமல் இருப்பதற்கே நாம் கிழக்குத் தேர்தலில் போட்டியிடுகின்றோம் என்ற இறுமாப்புடன் தேர்தலில் குதித்தவர்கள் இன்று தமது இருப்பிற்கே உலைவைக்கப்பட்டதனை உணர்ந்து கதிகலங்கிப் போயுள்ளனர் .
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிரசாரம் சில ஆதாரங்கள்
Aucun commentaire:
Enregistrer un commentaire