எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் கிழக்கு மாகாண சபையில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தம்முடன் இணைந்து போட்டியிடும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
அமைச்சர் அனுர பிரயதர்சன யாப்பா இதனைத் தெரிவித்துள்ளார். சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் சிறந்த புரிந்துணர்வு இருக்கிறது.
இதில் சிக்கல் ஒன்றும் இல்லை. எனவே முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடும். நிச்சமாக இந்த தேர்தலில் அரசாங்கம் வெற்றி பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை எதிர்வரும் மாகாண சபை தேர்தலிகளின் போது அமைச்சர்கள் மற்றும் அரசாங்க உறுப்பினர்களின் உறவினர்களை வேட்பாளர்களாக நிறுத்த இடமளிக்க கூடாது என சிறிலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளது.
எனினும் தற்போது அதிக அளவான அமைச்சர்கள் மற்றும் அரசாங்க உறுப்பினர்களின் உறுப்பினர்கள் சிறிலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளர் தெரிவு சபையிடம் தமது வேட்பு மனு கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதில் சிரேஷ்ட அமைச்சர் ஒருவரின் மகனும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
Aucun commentaire:
Enregistrer un commentaire