நான் எவரை நம்பியும் ஆட்சி நடத்த வில்லை. விருப்பமானவர்கள் இருக் கலாம், விருப்ப மில்லாதவர்கள் வெளியேறிச் செல்லலாம்.அதற்கான வாசல் கதவுகள் திறந்தே இருக்கின் றன. ஆனால் ஆட்சியை எவரும் நினைத்தபடி அசைக்க முடியாது. இவ்வாறு ஜனாதிபதி மகிந்த ராஜ பக் மிகவும் காட்டமுடன் தெரிவித் துள்ளார்.
ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பி னர்கள் கூட்டம் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜ பக் தலைமையில் நடைபெற்றது. சுமார் இரண்டு மணி நேரம் இடம் பெற்ற இக் கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி மகிந்த மேலும் தெரிவித்தமை வருமாறு, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக் கட் சியை குலைத்து சின்னாபின் மாக்கி விடலாம் என்று எவரும் கற் பனையில் கூட நினைத்து விட வேண்டாம். ஆட்சிக்குள்ளிருந்து சகல சலுகைகளையும் பெற்றுக் கொண்டு அதே ஆட்சிக்கு எதிராக செயற்படுவோர் குறித்த தகவல்கள் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.
அரசில் அங்கம் வகித்துக் கொண்டே அரசுக்கு எதிராக அறிக்கை விடுவ தையும், திட்டிப் பேசுவதையும் குறி த்து நான் இலட்டிக் கொள்ளப் போவ தில்லை. ஆனால் இவ்வாறெல்லாம் அரசுக்குள்ளிருந்து கொண்டு மேற் கொள்வதை அனுமதிக்க முடியாது. எவரையும் நம்பி நான் ஆட்சியமைக் கவில்லை. எவர் அரசை விட்டு வெளியேற முனைந்தாலும் அது குறித்து நான் அலட்டிக் கொள்ளப் போவதில்லை. எனக்கு அது பிரச் சினையுமில்லை. ஐக்கிய மக்கள் சுத ந்திர முன்னணி அரசை எவ்வாறு தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பது பற்றி எனக்கு நன்கு தெரியும்.
இந்த அரசுக்குள் இணைய வருவோ ருக்கான கதவும் திறந்தே இருக்கி றது. அதேபொல் அரசை விட்டு வெளியேறிச் செல்ல விரும்புபவர்க ளுக்காகவும் கதவு திறந்திருக்கிறது. தாராளமாகச் செல்லலாம்.இவ்வாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக் மிக ஆவே சமாக கூறியுள்ளார். அரசில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளினதும் தலைவர்களும், நாடாளுமன்ற உறுப் பினர்ளும் நேற்றைய கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத் தக்கது.
Aucun commentaire:
Enregistrer un commentaire