!இலங்கையின் போர்க் குற்றங்கள் பற்றிய டாக்குமென்ட்ரியை வெடிகுண்டாக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய பிரிட்டனின் சேனல்-4 தொலைக்காட்சி, அடுத்த வெடிகுண்டு ஒன்றை போட்டுள்ளது. இந்த வெடிகுண்டு யாருடைய தலையில் வந்து வீழ்ந்தது?
புதுடில்லியின் தலையில்!
ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற ராணுவக் குற்றங்கள் பற்றி அலசும் சேனல்-4 டாக்குமென்ட்ரி, இப்போது ஒளிபரப்பாகி டில்லியை அதிர வைத்திருக்கிறது. சேனல்-4ல் சுமார் 1 மணி நேரம் காண்பிக்கப்பட்ட இந்த டாக்குமென்ட்ரியின் பெயர், ‘Kashmir’s torture trail’.
இந்திய ராணுவத்தால் காஷ்மீர் பகுதியில் நடத்தப்பட்ட போர்க்குற்றங்கள் பற்றிய காட்சிகள் இதில் உள்ளன. பிரிட்டிஷ் டி.வி. சேனல் வெளியிட்ட டாக்குமென்ட்ரி ஒருபுறம் இருக்க, மறுபுறத்தில், மத்திய அரசை தாக்கும் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது, பிரிட்டிஷ் பத்திரிகை ‘கார்டியன்’.
கடந்த வருட நடுப்பகுதியில், இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் பற்றிய ‘Sri Lanka’s Killing Fields’ டாக்குமென்ட்ரி வெளியானபோது, பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் அது தொடர்பான விவாதம் ஒன்று நடைபெற்றது. பிரிட்டிஷ் எம்.பி.க்கள் சிலர், இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரணை வேண்டும் என்ற வாதத்தை முன்வைத்தார்கள்.
இப்போது, சேனல்-4 தமது புதிய வெடிகுண்டை இந்திய மண்ணில் போட்டிருப்பதை அடுத்து, பிரிட்டனுடன் கடினமான ராஜதந்திர டீலிங் ஒன்றை செய்ய வேண்டிய நிலை மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
இருந்து பாருங்கள், ஐ.நா.-வின் அடுத்த மனித உரிமை மாநாட்டில் இந்த விவகாரத்தை இலங்கை பெரிது படுத்த முயற்சிக்கும்.
Aucun commentaire:
Enregistrer un commentaire