mercredi 4 juillet 2012

தி.மு.க.,வின் சிறைநிரப்பும் போராட்டம் பிரமாண்டமாக வெற்றி


சென்னை: தமிழகம் முழுவதும் இன்று நடந்த தி.மு.க.,வின் சிறைநிரப்பும் போராட்டம் பிரமாண்டமாக வெற்றி பெற்றுள்ளதாகவும், தொண்டர்கள் எழுச்சியுடனும், உற்சாகத்துடனும் பங்கேற்றனர் என்றும் தி.மு.க.,தலைவர் கருணாநிதி கூறினார். அவர் மேலும் கூறுகையில்; தொண்டர்களை ஆந்திராவில் அடைப்போம் என்றெல்லாம் அரசு மிரட்டுகிறது. நாங்கள் எந்த சிறையில் அடைத்தாலும் அஞ்ச போவதில்லை. போலீசாரின் அச்சுறுத்தலையும் மீறி இன்று நடந்த போராட்டம் பிரமாண்டமாக வெற்றி பெற்றுள்ளது. இந்த போராட்டத்திற்கு பின்னரும் அரசு திருந்தும் என்ற நம்பிக்கை எனக்கில்லை.

சிறையை கண்டு தி.மு.க., அஞ்சாது: மு.க,.ஸ்டாலின் பேட்டி: சிறை நிரப்பும் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட மு.க., ஸ்டாலின் நிருபர்களிடம் கூறுகையில்; எத்தனையோ அடக்குமுறைகளை தி.மு.க,. பார்த்திருக்கிறது. எங்களை கைது செய்து எந்த பிரிவில் வழக்கு போட்டாலும் அதனை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம். தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். போராட்டத்தை முடக்க ஜெ., எடுத்த திட்டம் பலிக்கவில்லை. அறப்போராட்டம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. எத்தனை நாள் சிறையில் வைத்தாலும் அதனை கண்டு நாங்கள் அஞ்சுவதில்லை. சிறையை கண்டு தி.மு.க., அஞ்சாது என்றார்.


தலைவர் கருணாநிதி சொன்னதை விட 50 ஆயிரத்திற்கும் மேலாக லட்சம்பேர் கைதாவார்கள் என்ற செய்தி வந்து கொண்டிருக்கிறது. இந்த போராட்த்தை பார்த்தாவது ஆளும் கட்சி, குறிப்பாக ஜெயலலிதா திருந்த வேண்டும் இல்லையென்றால் மீண்டும் போராட்டம் நடத்துவது தொடர்பாக ஒரு முடிவு எடுக்கப்படும்.


பேட்டிக்கு பின்னர் போலீசார் ஸ்டாலினை கைது செய்து பஸ்சில் ஏற்றி கொண்டு சென்றனர். இது போல் சென்னை சைதாப்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட கனிமொழியும் கைது செய்யப்பட்டார்.

தமிழகம் முழுவதும் தி.மு.க.,வினரை பொய்வழக்கு போட்டு உள்ளே தள்ளுவதால் அதிர்ந்து போன கட்சியின் தலைமை சிறை நிரப்பும் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இன்று அனைத்து மாவட்டங்கள் மற்றும் ஒன்றியம் வாரியாக கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம் முன்பாக மறியல் போராட்டம் நடத்தி சிறைக்கு செல்ல அனைவரும் தயாராகுங்கள் என கருணாநிதி தொண்டர்களை உசுப்பேற்றினார்.

ஏற்கனவே பலரும் சிறைக்கு சென்று வரும் நேரத்தில் நாமும் சிறைக்கு செல்வதா என்ற கேள்வி ஒருபுறம் இருக்க, கட்சியின் கட்டளையை நிறைவேற்ற வேண்டும், அ,தி.மு.க.,ஆட்சிக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்ற எண்ணம் தொண்டர்கள் மத்தியில் பிறந்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இன்றைய போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திட தி.மு.க.,வட்டாரம் தயார்படுத்தியது.

அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட செயலர்கள் மற்றும் மாஜி அமைச்சர்கள் இந்த போராட்டத்திற்கு தலைமை வகிக்கின்றனர். சென்னை கொளத்தூரில் மு.க.,ஸ்டாலின் தலைமை ஏற்றார்ர். கனிமொழி போராட்டத்தில் பங்‌கேற்க கோர்ட்டில் சிறப்பு அனுமதியும் பெற்றுள்ளார்.

வன்முறை நடக்காமல் தடுக்க உஷார்: இந்த போராட்டத்தின் போது போலீசார் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபடும்போது வன்முறை எதுவும் நடவாமல் தடுக்க போலீசார் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால் போராட்டக்களத்தில் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

ரிமாண்டா இல்லையா? : இன்றைய போராட்டத்தில் கலந்து கொள்பவர்களை கைது செய்து கல்யாண மண்டபத்தில் அடைத்து விட்டு விடுவதா அல்லது ரிமாண்ட் செய்வதா என்று இன்னும் தமிழக அரசு தரப்பில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.

கோவை - திருப்பூரில் 7 இடங்களில் போராட்டம்: கோவை மற்றும் திருப்பூரில் பொள்ளாச்சி, வால்பாறை, சூலூர், உள்ளிட்ட7 இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டது. கோவை ‌பொங்கலூர் பழனிச்சாமி தலைமையில் ஆயிரக்கணக்‌கானோர் கைது செய்யப்பட்னர். திருச்சியில் நேரு தலைமையில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

Aucun commentaire:

Enregistrer un commentaire