சமீபகாலமாக முதுகெலும்பு இல்லாத அரசியல்வாதிகள் அதிகரித்து வருகிறார்கள். இதுகுறித்து ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும்'' என்று மம்தா பானர்ஜி கடுமையாக தாக்கி உள்ளார்.
பழமையான அன்பு கலந்த கருத்துகள், தைரியம், சாமானிய மக்களுடன், அவர்களது அடிமட்டம் வரை செல்லும் நெருக்கம் இப்போது உள்ள அரசியல்வாதிகளிடம் காணப்படவில்லை. அவர்கள் பலவீனமானவர்களாக, சாமானிய மக்களின் உரிமைகளுக்காக போராட பயப்படுவதால், உண்மையை வெளிக்கொண்டுவர தயங்குவதால் இந்த நிலைமை ஏற்பட்டு உள்ளது.
இன்றைய இளம் தலைமுறையினர், இத்தகையை தற்போதைய தலைவர்களின் தகுதி, வெற்றுப் பேச்சு, உபயோகமற்ற கருத்துகளை உணர்ந்து பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன், உணர்ந்து பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன்.
மே.வங்காள மாநில முதல் மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி, தனது பேஸ் புக்' பக்கத்தில், அரசியல் வாதிகளை கடுமையாக தாக்கி கருத்து வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:
சமீப காலமாக முதுகெலும்பு இல்லாத அரசியல்வாதிகள், குறிப்பாக முதுகெலும்பு இல்லாத அரசியல் தலைவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அது ஏன் என்று ஆராய்ச்சி செய்ய வேண்டியது அவசியம். இப்போது முக்கியமாக ஆராய்ச்சி செய்ய வேண்டிய விஷயம் இதுதான் என்று கருதுகிறேன்.
பழமையான அன்பு கலந்த கருத்துகள், தைரியம், சாமானிய மக்களுடன், அவர்களது அடிமட்டம் வரை செல்லும் நெருக்கம் இப்போது உள்ள அரசியல்வாதிகளிடம் காணப்படவில்லை. அவர்கள் பலவீனமானவர்களாக, சாமானிய மக்களின் உரிமைகளுக்காக போராட பயப்படுவதால், உண்மையை வெளிக்கொண்டுவர தயங்குவதால் இந்த நிலைமை ஏற்பட்டு உள்ளது.
தலைமைப் பதவியில் இருப்பவர்கள் அல்லது தலைவராக இருப்பவர்கள், மக்களின் கோரிக்கைகளுக்கு முதலில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மனிதாபிமானம் மிக்கவர்களாக வளர வேண்டும்.
இன்றைய இளம் தலைமுறையினர், இத்தகையை தற்போதைய தலைவர்களின் தகுதி, வெற்றுப் பேச்சு, உபயோகமற்ற கருத்துகளை உணர்ந்து பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன், உணர்ந்து பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன்.
இளைஞர்களே, வீறுகொண்டு எழுச்சி கொள்ளுங்கள். மனதில் பயமின்றி, உறுதியாக நின்று, கடைசிவரை போராடுங்கள். சாமானிய மக்களுக்காக நம்மை நாம் அர்ப்பணிக்க உறுதிகொள்வோம். இவ்வாறு அவர் தனது பேஸ் புக்'கில் தெரிவித்து உள்ளார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire